டெல்லி: பல மாநிலங்களில் பருவமழை பெய்து வருவதால், தக்காளி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சந்தைகளில் தக்காளி விலை ரூ. 90 வரை உயர்ந்துள்ளதாக காய்கறி வியாபாரிகள் பலர் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தனர். இந்த செய்திக் குறிப்பில், குறிப்பாக தக்காளி விலை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பது பற்றியும், அதற்கான காரணங்கள் என்ன? என்பது பற்றியும் காண்போம்.
டெல்லியின் ஆசாத்பூர் மண்டி, காஜிபூர் மண்டி, ஓக்லா சப்ஜி மண்டி உள்ளிட்ட முக்கிய மொத்த காய்கறி சந்தைகளிலும் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தங்கள் உள்ளூர் சந்தைகள் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களிலும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் அங்கு வசிக்கும் பலர் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, நாங்கள் ரூ. 28-க்கு, 1 கிலோ தக்காளி வாங்கினோம், அப்போது விலை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது 1 கிலோ தக்காளி ஆன்லைனிலும் உள்ளூர் சந்தையிலும் ரூ. 90-க்கு விற்கப்படுகிறது. காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன, என்று லட்சுமி நகர் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
மழையின் காரணமாக மொத்த சந்தைகளில் கூட 1 கிலோவுக்கு ரூ. 50 வரை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதே இதற்குக் காரணம். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் எண்ணிக்கை, கனமழை காரணமாக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
முன்னதாக, தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 30 முதல் 35 ரூபாயாக இருந்தது, ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மொத்த சந்தைகளில் ரூ. 60 முதல் 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. தக்காளி இதனால் சீக்கிரமே அழுகிவிடுகிறது. மழையால், வரத்தும் பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்து வருவதாக, அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதத்தில், வீட்டில் சமைக்கப்பட்ட சைவ தாலியின் ஒரு பிளேட் (veg meals) விலை அதிகரித்தும், அசைவ தாலியின் (non-veg meals) விலை குறைந்தும் உள்ளது என்று CRISIL-இன் ரொட்டி ரைஸ் ரேட் அறிக்கை கூறுகிறது. கோழி கறியின் விலை குறைந்ததாலும், தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்ந்ததாலும், கடந்த மாதத்தில் நீங்கள் அசைவ சாப்பாட்டுக்கு குறைவாக செலவிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளியின் விலை உயர்ந்து வருவது, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எந்த குழம்பு வைக்க வேண்டுமானாலும் சரி தக்காளி தான் முதன்மையான மூலப் பொருள். இது போன்ற சூழ்நிலைகளில் உள்ளூர் கடைகளின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது, பருவ கால காய்கறிகளை வாங்கி சமைப்பது போன்ற சிறு யுக்திகள் உங்களுக்கு உதவலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications