இந்தியாவில் அண்மைக்காலமாக பாதுகாப்பு துறை மற்றும் கப்பல் கட்டுமான துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் லாபம் தரக்கூடியவையாக மாறியுள்ளன. அந்த வகையில் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஒரு மாத காலத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித் தந்த பாதுகாப்பு துறை நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
1. கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (Garden Reach Shipbuilders & Enginers Ltd) இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜூலை 22ஆம் தேதி பங்குச்சந்தையில் 2,545 ரூபாய் என வர்த்தகமானது. இது ஒரு மாத காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 90% லாபமும் , ஓராண்டில் 324% லாபமும் தந்துள்ளது.

2. மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (Mazagon Dock Shipbuilders Ltd)- தற்போது 5,325 ரூபாய் என வர்த்தகமாகி வருகிறது, ஒரு மாதத்தில் இந்த பங்கின் மதிப்பு 73% உயர்ந்துள்ளது, ஓராண்டில் 185 % அதிகரித்துள்ளது.
3. பராஸ் டிஃபென்ஸ் லிமிடெட் (Paras Defence and Space Technologies Ltd)- தற்போது இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 1,358 ரூபாய். ஒரு மாதத்தில் இது 63% மற்றும் ஓராண்டில் 1 100% லாபம் தந்துள்ளது.
4. கொச்சின் ஷிப்யார்ட் (Cochin shipyard) - தற்போது 2670ரூபாய் என இது வர்த்தகமாகிறது. ஒரு மாதத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 49% மற்றும் ஓராண்டில் 697% என உயர்வு கண்டுள்ளது.
5. பிஈஎம்எல் (BEML Ltd) - இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4716 ரூபாய் என உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் இதன் மதிப்பு 28% மற்றும் ஓராண்டில் 178% உயர்ந்துள்ளது.
6. டேட்டா பேட்டர்ன்ஸ் (Data Patterns (India) Ltd ) -இந்த பங்கின் விலை தற்போது 3206 ரூபாய் ஆகும். ஒரு மாதத்தில் இது 23% மற்றும் ஒரு ஆண்டு காலத்தில் 60% லாபம் தந்துள்ளது.
7. பாரத் டைனமிக்ஸ் (Bharat Dynamics Ltd) நிறுவனப் பங்கின் மதிப்பு தற்போது 1,485.85 ஆகும். இது ஒரு மாதத்தில் 17% மற்றும் ஓராண்டில் 152% லாபம் தந்துள்ளது.
8. பாரத் எலக்ட்ரானிக்ஸ் (Bharat Electronics Ltd) நிறுவன பங்கின் தற்போதைய விலை 310.95 ரூபாய். ஒரு மாதத்தில் இது 15% மற்றும் ஒரு ஆண்டில் 146 % லாபம் ஈட்டியுள்ளது.
9. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Ltd) - இதன் தற்போதைய விலை 4,942.10 ரூபாய். ஓராண்டில் இதன் மதிப்பு 154% மற்றும் ஒரு மாதத்தில் 12% அதிகரித்துள்ளது.
10. ஆஸ்திரே மைக்ரோவேவ் (Astra Microwave Products Ltd) இந்நிறுவனத்தின் தற்போதைய பங்கு மதிப்பு 898.55 ரூபாய். ஒரு மாதத்தில் இது 3% மற்றும் ஓராண்டில் 144% வளர்ச்சி அடைந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications