ஐடி, வங்கிகள், பார்மா துறைகளில் முதலீட்டாளர்களில் லாபத்தினை முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்ததால், 10 நாள் ஏற்றமானது, இன்று ஒரே நாளில் காணாமல் போயுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 1066.33 புள்ளிகள் சரிந்து, 39,728 ஆக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 290.60 புள்ளிகள் குறைந்து, 11,680 ஆக முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் டாப் 10 கெயினர்களும், டாப் லூசர்களும் உள்ள பங்கினை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
Tata Elxsi பங்கு
லிஸ்டில் முதலில் இருப்பது Tata Elxsi நிறுவனம் தான். இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 58.3% லாபம் அதிகரித்து, நிகரலாபம் 78.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 49.8 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே செயல்பாட்டு வருவாய் 11.5% அதிகரித்து 430.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 385.8 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இன்றைய முடிவில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 1,463.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
வீழ்ச்சியில் மைண்ட்ரீ பங்கு
மைண்ட்ரீ நிறுவனத்தின் காலாண்டு முடிவு இன்று எப்படி வருமோ என்ற எதிர்பார்ப்பில், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 7% குறைந்துள்ளது. எனினும் முடிவுக்கு பின்பு வெளியான இந்த அறிக்கையில், இரண்டாவது காலாண்டில் லாபம் 13.8% அதிகரித்து, 253.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டாடா பவர் & டாடா மோட்டார்ஸ்
முதலீட்டினை திரட்டுவதற்காக கொள்கை ரீதியான ஒப்புதலுக்காக நிறுவனம் ஏற்கனவே செபிக்கு விண்ணப்பத்தினை அளித்துள்ளது. இதற்கிடையில் டாடா பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது, சற்று அதிகரித்து பச்சை நிறத்தில் 53.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 4 கோடி பங்குகளை, முதலீட்டாளரான ராகேஷ் ஜூன் ஜூன்வாலா, கடந்த செப்டம்பர் காலாண்டில் விற்றதாக பங்கு சந்தை தரவுகள் வெளியான நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3% வீழ்ச்சி கண்டு, 126.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பட்டையை கிளப்பிய ரானே பிரேக் லைனிங்
ரானே பிரேக் லைனிங் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில், நிகரலாபம் 54.7% அதிகரித்து, 11.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 7.5 கோடி ரூபாயாக இருந்தது. இதே வருவாய் 3.7% குறைந்து 105.4 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 109.4 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 6% அதிகரித்து 680.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி & விம்தா லேப்ஸ்
லட்சுமி விலாஸ் வங்கி குழு உரிமை பங்கு வெளியீடு மூலம் 500 கோடி ரூபாய் திரட்ட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த வங்கியின் பங்கு விலையானது 3% சரிந்து, 17.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
விம்தா லேப்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் அதன் நிகரலாபம் 7.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வருவாய் 38.5% அதிகரித்து, 58.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வரி மற்றும் தேய்மானத்திற்கு முன்பு லாபம் 15.8 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவன பங்கின் விலையானது 5% அதிகரித்து 133.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பலத்த அடி வாங்கிய டென் நெட்வொர்க்ஸ்
டென் நெட்வொர்க்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் அதன் லாபம் 61.41% குறைந்து, 36.77 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 95.30 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 6% வீழ்ச்சி கண்டு, 81.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
என்எம்டிசி & தாமஸ் குக் இந்தியா
தாமஸ் குக் இந்தியா நிறுவனத்தின் மதிப்பினை கிரிசில் நிறுவனம் குறைத்துள்ளதையடுத்து, இந்த நிறுவனத்தின் பங்குஇ மதிப்பானது சரிந்து 27.65 ரூபாயாக காணப்படுகிறது.
இதே என்எம்டிசி நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது ஒரு சதவீதம் அதிகரித்து 80.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications