கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு உலகளவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல், பல பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சரிந்தும், சிலரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் உலக நாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் உருவாகியுள்ளது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மாற்றம் உருவாகியுள்ளது. குறிப்பாக 3வது இடத்திலும் 6வது இடத்திலும் இருப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். நீண்ட காலத்திற்குப் பின்பு டாப் 10 இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பெண் இடம்பெற்றுள்ளார்.
கௌதம் அதானி
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 65 மில்லியன் டாலர் அதிகரித்து 90.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக மட்டும் அல்லாமல் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகவும் உயர்ந்துள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தையும் பெற்றுள்ளார்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இன்று 2 பில்லியன் டாலர் சரிந்து 89.2 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவின் 2வது பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தை எட்டியுள்ளார்.
3வது இடம்
பல வருடங்களாக டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் 28.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் முறையாக 3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மற்றவர்கள்
ராதாகிஷன் தமனி - 19.9 பில்லியன் டாலர் - 4வது இடம்
லட்சுமி மிட்டல் - 18.2 பில்லியன் டாலர் - 5வது இடம்
சாவித்ரி ஜின்டா - 17.5 பில்லியன் டாலர் - 6வது இடம்
குமார் மங்களம் பிர்லா - 17.1 பில்லியன் டாலர் - 7வது இடம்
சைரஸ் பூனவல்லா - 16.8 பில்லியன் டாலர் - 8வது இடம்
திலீப் ஷங்வி - 15.7 பில்லியன் டாலர் - 9வது இடம்
உதய் கோட்டாக் - 15.4 பில்லியன் டாலர் - 10வது இடம்
சுனில் மிட்டல் - 14.6 பில்லியன் டாலர் - 11வது இடம்
அசிம் பிரேம்ஜி - 10.5 பில்லியன் டாலர் - 12வது இடம்
குஷால் பால் சிங்- 10.1 பில்லியன் டாலர் - 13வது இடம்
பஜாஜ் பிரதர்ஸ் - 9.3 பில்லியன் டாலர் - 14வது இடம்
அஸ்வின் டானி & குடும்பம் - 9.3 பில்லியன் டாலர் - 15வது இடம்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications