தொழில், நிதி, பேஷன், இ-காமர்ஸ், ஸ்கின்கேர் உள்பட பல்வேறு துறைகளில் திறமையுடன் செயல்பட்டு இன்றைக்கு உலகின் டாப் 10 பணக்காரப் பெண்மணிகளாகத் திகழும் பெண்கள் பற்றி பார்க்கலாம்.
ஃப்ரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்
வயது : 70
நாடு: பிரான்ஸ்
பரம்பரைப் பணக்காரரான ப்ரான்காய்ஸ் மேயர்ஸ் இப்போதைக்கு உலகின் முதல் பணக்காரப் பெண்மணியாக உள்ளார். எல்ஓரியால் நிறுவனரின் பேத்தியான மேயர்ஸ் அந்த நிறுவனத்தின் மூன்றின் ஒரு பங்கு சொத்தை வைத்துள்ளார்.

எல்ஓரியாலின் தலைவராக பிரான்காய்ஸ் மேயர்ஸ் பதவி வகிக்கிறார். கொரோனா தொற்றுக் காலத்தின்போது நிறுவனத்தின் வளர்ச்சி சற்று குறைந்தாலும் சிறப்பாக மீண்டது. 100 பில்லியன் டாலர்கள் வைத்திருக்கும் முதல் பெண்மணியாக உள்ளார்.
அலைஸ் வால்டன்
வயது: 74
நாடு: அமெரிக்கா
வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டனின் வாரிசான அலைஸ் வால்டனும் பரம்பரை பணக்காரர் ஆவார். அவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். அர் போலல்லாமல் அவரது இரண்டு சகோதரர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அலைஸுக்கு கலை மீது மிகுந்த ஆர்வம் உள்ளது.2011இல் கிரிஸ்டல் பிரிட்ஜஸ் மியூசியத்தை பென்டன்வில்லியில் தொடங்கினார். அமெரிக்க கலைகள் பற்றிய பொருட்கள் அங்கு இடம்பெற்றுள்ளன.
கடந்த மாதம் வால்டன் குடும்பத்தின் சொத்தான டிரஸ் ஸ்டாக்ஸின் 21 மில்லியன் டாலர் பங்குகளை அலைஸ் விற்றார்.
ஜூலியா கோச்
வயது: 62
நாடு: அமெரிக்கா
ஜூலியா கோச்சுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு 2019இல் மறைந்த ஜூலியாவின் கணவர் டேவிட்டின் கோச் இண்டஸ்ட்ரீஸின் 42 சதவீத பங்கு உள்ளது. ஜூலியா அறக்கொடையில் ஈடுபாட்டுடன் உள்ளார். ஜூலியா கோச் பேமிலி பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை மூலம் அவர் 75 மில்லியன் டாலர்களை ஒரு ஆம்புலேட்டரி கேர் சென்டருக்கு தானமாக அளித்துள்ளார்.
சாவித்திரி ஜிண்டால்
வயது: 74
நாடு: இந்தியா
உலகின் டாப் 10 பணக்காரப் பெண்மணிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் சாவித்திரி ஜிண்டால். ஜிண்டால் குரூப்பின் தலைவராக சாவித்திரி ஜிண்டால் உள்ளார். ஸ்டீல், பவர், சிமெண்ட், இன்ப்ராஸ்ட்ரக்சர் துறைகளில் அவரது குரூப் செயல்படுகிறது.
சாவித்திரியின் கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டாலிடமிருந்து இந்த சொத்தை அவர் பெற்றுள்ளார். தொழிலில் மட்டுமல்லாமல் அரசியலிலும் சாவித்திரி ஈடுபட்டாார். ஹரியாணாவில் பூபிந்திர் சிங் ஹூடாவின் காங்கிரஸ் அரசில் சாவித்திரி ஒரு அமைச்சராக இருந்தார். 2024 மார்ச்சில் அவரும், அவரது மகன் நவீன் ஜிண்டால் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
ஜாக்குலின் மார்ஸ்
வயது: 84
நாடு: அமெரிக்கா
மிட்டாய், உணவுகள், பெட் கேர் நிறுவனமான மார்ஸின் மூன்றின் ஒரு பங்கு சொத்தை ஜாக்குலின் மார்ஸ் வைத்துள்ளார்.
இருபது ஆண்டுகளாக கம்பெனியின் போர்டில் உறுப்பினராக உள்ளார். 2016இல் அவர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பின் அவரது பொறுப்பை ஜாக்குலினின் மகன் ஸ்டீபன் பேட்ஜர் வகிக்கிறார்.
ரஃபேலா அபான்டே டியாமன்ட்
வயது: 79
நாடு: ஸ்விட்ஸர்லாந்து
உலகின் மிகப் பெரிய ஷிப்பிங் நிறுவனமான எம்எஸ்சியின் 50 சதவீத பங்கை ரபேலா அபான்டே டியாமன்ட் வைத்துள்ளார். மீதி 50 சதவீத பங்கை அவரது கணவர் வைத்துள்ளார்.
பணக்கார பெணகள் பட்டியலில் உள்ள மற்றவர்களைப் போல் அல்லாமல் ஜாக்குலின் சுயமநாக தொழிலில் முன்னேறியவர்.
அவரது எம்எஸ்சி குரூஸ் தலைசிறந்த ஹாலிடே குரூஸ்ஸாக விளங்குகிறது.
மெக்கன்ஸி ஸ்காட்
வயது : 54
நாடு: அமெரிக்கா
அமேசான் நிறுவனர் ஜெப் பேஸோஸுடமிருந்து விவாகரத்து வாங்கிய பின்னர் அமேசானின் 4 சதவீத பங்கை மெக்கன்ஸி பெற்றார்.
தனது சொத்தில் 16.5 பில்லியன் டாலர்களை 2000க்கும் மேற்பட்ட தன்னார்வ நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அவர் ஒரு எழுத்தாளரும் ஆவார். இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஜினா ரைன்ஹார்ட்
வயது: 70
நாடு: ஆஸ்திரேலியா
ஜினாவின் தந்தை லாங் ஹான்காக் ஹான்காக் புராஸ்பெக்டிங் என்ற சுரங்கம், விவசாயத்துறை தொழில் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் கடன்களை போக்கி பிசினஸ்ஸை மீண்டும் வளர்த்தார் ஜினா.
1992இல் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் தலைவராக பதவி ஏற்றார். எம்பி ரேர் எர்த் மெட்டீரியல் கம்பெனியின் பெரும்பான்மை பங்குதாரராக ஹான்காக் புராஸ்பெக்டிங் உள்ளது.
அபிகெய்ல் ஜான்சன்
வயது: 62
நாடு: அமெரிக்கா
2014இல் பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் சிஇஓவாக அபிகெய்ல் ஜான்சன் ஆனார். நிறுவனத்தின் 28 சதவீத பங்கை அவர் வைத்துள்ளார்.
மிரியம் அடல்சன்
வயது: 78
நாடு: அமெரிக்கா
மறைந்த ஷெல்டன் அடல்சனின் மணைவியான மிரியம் அடல்சன் லாஸ் வேகாஸ் சாண்ட்ஸ் கேசினோ கம்பெனியின் முன்னாள் சிஇஓ ஆவார். கம்பெனியின் பாதி பங்குகளை அவர் வைத்துள்ளார்.
சிங்கப்பூர், மக்காவில் புகழ்பெற்ற கேசினோக்களை மிரியம் நடத்தி வருகிறார்.
2020இல் டொனால்டு டிரம்பின் அதிபர் தேர்தல் பிரசாரத்துக்காக 90 மில்லியன் டாலர்களை நன்கொடையாக மிரியம் அளித்தார்.
Story written by: Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications