சென்னை: பலருக்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கும். ஆனால் பங்கினை எவ்வாறு தேர்வு செய்வது, எந்த பங்கில் முதலீடு செய்தால் நல்ல ஆதாயம் அடையலாம் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் சிலருக்கு நேரடியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட நேரம் கிடைக்காது. இது போன்ற நபர்களுக்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாக இருக்கும்.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்கு, கடன் உள்பட பல்வேறு வகையான பரஸ்பர நிதி திட்டங்களை செயல்படுத்துகின்றன. பங்குகளில் முதலீடு செய்பவை ஈக்விட்டு பண்டுகள்.

2023ம் ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் பல பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக செல்வத்தை உருவாக்க உதவியது. இந்த காலண்டர் ஆண்டில் பெரும்பாலான திட்டங்கள் இரட்டை இலக்க வருமானத்தை கொடுத்தன. சில பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் 20 முதல் 30 சதவீதம் ஆதாயத்தை அளித்தன. உதாரணமாக, நீங்கள் 2023 ஜனவரி 1ம் தேதியன்று Mahindra Manulife Small Cap Fund திட்டத்தில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து இருந்தால் அது இப்போது (அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி) ரூ.13,934.49ஆக உயர்ந்து இருக்கும். அதாவது இந்த பங்கு பரஸ்பர நிதி திட்டம் 39.94 ஆதாயம் அளித்துள்ளது.
2023ம் ஆண்டில் 30 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் அளித்த டாப் 15 பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் பார்ப்போம். 2023 ஜனவரி 1 முதல் அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி, Mahindra Manulife Small Cap Fund முதலீட்டாளர்களுக்கு 39.34 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
Franklin India Smaller Companies Fund முதலீட்டாளர்களின் செல்வத்தை 36.30 சதவீதம் அதிகரித்துள்ளது.
Bandhan Emerging Businesses Fund முதலீட்டுக்கு 35.08 சதவீதம் ஆதாயம் அளித்தது.
Union Small Cap Fund முதலீட்டாளர்களுக்கு 34.04 சதவீதம் லாபம் கொடுத்தது.
Nippon India Small Cap Fund முதலீட்டை 34.01 சதவீதம் அதிகரித்தது.
HSBC Small Cap Fund முதலீட்டாளர்களின் பணத்தை 33.98 சதவீதம் உயர்த்தியது.
HDFC Small Cap Fund முதலீட்டாளர்களுக்கு 33.66 சதவீதம் லாபம் கொடுத்தது.
JM Midcap Fund முதலீட்டாளர்களுக்கு 32.68 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
ITI Small Cap Fund முதலீட்டாளர்களின் செல்வத்தை 32.57 சதவீதம் அதிகரித்தது.
JM Value Fund முதலீட்டாளர்களுக்கு 31.53 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது.
Sundaram Small Cap Fund முதலீட்டாளர்களுக்கு 30.62 சதவீதம் ஆதாயம் கிடைத்தது.
Mahindra Manulife Mid Cap Fund முதலீட்டாளர்களுக்கு பணத்தை 30.26 சதவீதம் அதிகரித்தது.
Bank of India Small Cap Fund முதலீடு செய்தவர்களுக்கு 30.16 சதவீதம் ஆதாயம் கொடுத்தது.
DSP Small Cap Fund முதலீட்டாளர்களுக்கு 30.09 சதவீதம் வருமானம் கிடைத்தது.
Aditya Birla Sun Life Small Cap Fund 30.04 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications