பிபிஎப், வைப்பு நிதியை விட அதிக வருமானம்.. டாப் 5 Dividend Rich Stocks..!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) போன்ற ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டங்களை விடவும் சில நிறுவனங்கள் அதிக டிவிடென்ட் தொகையை கொடுத்து முதலீட்டாளர்களை குஷிப்படுத்தும்.

பங்குச்சந்தையில் அதிக டிவிடெண்ட் தரும் பங்குகளை குறிவைத்து முதலீடு செய்வதன் மூலம் குறிப்பிட்ட அளவிலான ஆபத்துகளை குறைக்க முடியும். அதற்கு முன்பு நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் டிவிடெண்ட் வரலாற்றை கட்டாயம் தெரிந்துக்கொண்டு சந்தை வர்த்தக சூழ்நிலை உடன் ஒப்பிட்டு முதலீடு செய்வது தான் சரியாக இருக்கும்.

இந்த வகையில் 2022-23 ஆம் நிதியாண்டில் குறைந்த பட்சம் 29 சதவிகிதம் ஈவுத்தொகையை வழங்கிய ஐந்து உயர் ஈவுத்தொகை-பங்குகளை தான் நாம் எப்போது பார்க்கப்போகிறோம். 29 சதவீத ஈவுத் தொகை என்றால் EPF, PPF, FD லாபத்தை விடவும் அதிக லாபமாகும்.

வேதாந்தா

வேதாந்தா

வேதாந்தா லிமிடெட் ஜூலை 23, 2001 முதல் 39 முறை டிவிடெண்டுகளை அறிவித்துள்ளது. இதில் கடந்த 12 மாதங்களில் அதாவது 2022-23 ஆம் நிதியாண்டில், வேதாந்தா லிமிடெட் ஒரு பங்குக்கு 81.00 ரூபாயை டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

தற்போதைய பங்கின் விலையான 274.45 ரூபாயை ஒப்பிடுகையில் இது 29.51 சதவீத மதிப்பை ஈவுத்தொகையாக கொடுத்துள்ளது.

ஹிந்துஸ்தான் ஜிங்க்

ஹிந்துஸ்தான் ஜிங்க்

ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ஜூன் 28, 2001 முதல் 39 முறை டிவிடெண்டுகளை அறிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் அதாவது 2022-23 ஆம் நிதியாண்டில், ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ஒரு பங்குக்கு 75.50 ரூபாயை டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

தற்போதைய பங்கின் விலையான 293.35 ரூபாயை ஒப்பிடுகையில் இது 25.74 சதவீத மதிப்பை ஈவுத்தொகையாக கொடுத்துள்ளது.

கோல் இந்தியா

கோல் இந்தியா

கோல் இந்தியா லிமிடெட் பிப்ரவரி 18, 2011 முதல் 23 முறை டிவிடெண்டுகளை அறிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் அதாவது 2022-23 ஆம் நிதியாண்டில், கோல் இந்தியா ஒரு பங்குக்கு 23.25 ரூபாயை டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

தற்போதைய பங்கின் விலையான 213.65 ரூபாயை ஒப்பிடுகையில் இது 10.88 சதவீத மதிப்பை ஈவுத்தொகையாக கொடுத்துள்ளது.

REC லிமிடெட்

REC லிமிடெட்

REC லிமிடெட் செப்டம்பர் 8, 2008 முதல் 32 முறை டிவிடெண்டுகளை அறிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் அதாவது 2022-23 ஆம் நிதியாண்டில், REC லிமிடெட் ஒரு பங்குக்கு 13.05 ரூபாயை டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

தற்போதைய பங்கின் விலையான 115.45 ரூபாயை ஒப்பிடுகையில் இது 11.30 சதவீத மதிப்பை ஈவுத்தொகையாக கொடுத்துள்ளது.

ஓஎன்ஜிசி

ஓஎன்ஜிசி

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகஸ்ட் 29, 2000 முதல் 54 முறை டிவிடெண்டுகளை அறிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் அதாவது 2022-23 ஆம் நிதியாண்டில், REC லிமிடெட் ஒரு பங்குக்கு 14.00 ரூபாயை டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

தற்போதைய ஓஎன்ஜிசி பங்கின் விலையான 151.05 ரூபாயை ஒப்பிடுகையில் இது 9.27 சதவீத மதிப்பை ஈவுத்தொகையாக கொடுத்துள்ளது.

ஒப்பீடு

ஒப்பீடு

வேதாந்தா, ஓஎன்ஜிசி, REC லிமிடெட், கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் ஜிங்க் ஆகிய நிறுவனத்தின் 2022-23 ஆம் நிதியாண்டின் ஈவுத்தொகையை ஒப்பிடுகையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) போன்ற ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டங்களை விடவும் அதிக வருமானத்தை டிவிடெண்ட் ஆகவே கொடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+