பொதுத்துறை நிறுவனங்கள் எப்போதும் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த வருகின்றன. முக்கியமான சேவைகளை வழங்கி வருகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. தனியார் நிறுவனங்கள் அளவுக்கு பொதுத்துறை நிறுவனங்களால் வேகமாக வளர்ச்சி காண முடியாத நிலை ஒரு காலத்தில் இருந்தது.
மேலும் சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தன. ஆனால் காலம் மாறினால் காட்சியும் மாறும் என்பது போல், மத்திய அரசு மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளால் இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகின்றன. சமீபத்தில் இந்த பொதுத்துறை நிறுவனங்களில் பல வலுவான வளர்ச்சி திறனை காட்ட தொடங்கியுள்ளன. அவற்றின் பாரம்பரிய மெதுவான வேக பிம்பத்தை தகர்த்து முன்னேறி வருகின்றன.

கடந்த 5 ஆண்டுளில் 15 சதவீதத்துக்கும் அதிகமான விற்பனை மற்றும் நிகர லாப கூட்டு சராசரி வளர்ச்சி விகிதத்தை வழங்கிய, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 1க்கும் குறைவான கடன்-பங்கு விகிதத்தை கொண்டிருந்த மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளை காட்டும் டாப் 5 பொதுத்துறை பங்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 5 பங்குகளும் முதலீட்டுக்கு ஏற்ற நல்ல வருமானம் தர வாய்ப்புள்ள பங்குகளாக கருதப்படுகிறது.
1.கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ)
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்தியாவின் முதன்மையான கப்பல் கட்டும் நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கப்பம் கட்டும் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
2024 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இந்நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாகும். கடந்த 5 ஆண்டுகளில் நிறுவனத்தின் பங்கு மீதான வருமானம் மற்றும் பயன்படுத்தப்பட்ட மூலதனத்தின் மீதான வருமானம் முறையே 17.2 சதவீதம் மற்றும் 22.7 சதவீதமாக உள்ளது. கடந்த டிசம்பர் இறுதி நிலவரப்படி, இந்நிறுவனத்துக்கு 23,880 கோடி மதிப்பிலான ஆர்டகளை கொண்டுள்ளது.
வலுவான ஆர்டர் புத்தகம், அரசாங்க ஆதரவு மற்றும் திறன் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான மூலோபாய முயற்சிகளால் இயக்கப்படுவதால் நிர்வாகம் நிறுவனத்தின் எதிர்காலத்தை பற்றி நம்பிக்கையுடன் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,749ஆக இருந்தது.
2.இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி)
ஐஆர்சிடிசி என்பது ஒரு மினிரத்னா நிறுவனமாகும். இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலகளில் ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள், கேட்டரிங் சேவைகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வழங்க இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் ஐஆர்சிடிசி.
2024 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இந்நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாகும். கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு1,230 கோடியை எட்டியது. இந்நிறுவனத்தின் ஆன்லைன் கேட்டரிங் பிரிவு சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 1.02 லட்சம் உணவுகளை வழங்குகிறது.
ஆடம்பர ரயில் சேவைகள், பாரத் கவுரவ் ரயில் திட்டம் மற்றும் பயணத்துக்கான அதிகரித்த தேவை ஆகியவற்றால் இயக்கப்படும் சுற்றுலா பிரிவில் வளர்ச்சி பாதை குறித்து நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.704.25ஆக இருந்தது.
3.ரயில் விகாஸ் நிகாம்: மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் ரயில் விகாஸ் நிகாம். இந்நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தால் ஒதுக்கப்படும் பல்வேறு ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. 2024 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.7ஆக உள்ளது. இந்நிறுவனம் ரூ.97,000 கோடி மதிப்பிலான ஆர்டர் புத்தகத்தை கொண்டுள்ளது.
ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் 2024-25ம் நிதியாண்டுக்கான வருவாய் வழிகாட்டுதலை ரூ.21,000 கோடியாக மதிப்பிட்டுள்ளது. இதில், 13,000 கோடியை முதல் 9 மாதங்களில் எட்டப்பட்டு விட்டது. போட்டி அழுத்தங்கள் இருந்தபோதிலும் லாப வரம்பை பராமரிப்பதிலும், செயல்பாட்டு திறன் மற்றும் திட்ட செயல்படுத்தல் திறன்களை பயன்படுத்துவதிலும் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.362.05ஆக இருந்தது.
4.மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்டிஎல்): இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் தளங்களில் எம்டிஎல் ஒன்றாகும். இந்நிறுவனம் பாதுகாப்பு அமைச்கம் மற்றும் வர்த்தக கப்பல்களுக்கான போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிர்மாணிப்பதிலும் பழுது பார்ப்பதிலும் நிபுணத்துவம் பெற்றது.
2024 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இந்நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாகும். கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, இந்நிறுவனம் வசம் ரூ.34,790 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் உள்ளது. இந்நிறுவனம் அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்ட ரூ.5,000 கோடி மதிப்பிலான விரிவான மூலதன திட்டத்தை கொண்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் சிறப்பான வளர்ச்சி கண்டு வளர்ந்துள்ளது.வருவாயில் எதிர்பார்க்கப்படும் சரிவு இல்லை என்று கூறி எதிர்கால வளர்ச்சி குறித்து நிர்வாகம் நம்பிக்கையை பேணுகிறது. தொழில்துறை தரநிலைகளை பிரதிபலிக்கும் வகையில், வரிக்கு முந்தைய லாப அளவில் 12 முதல் 15 சதவீதம் நிலையான லாப வரம்புகளை இந்நிறுவனம் பராமரிக்கிறது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.2,643.40ஆக இருந்தது.
5.குஜராத் கேஸ் லிமிடெட்: குஜராத் கேஸ் லிமிடெட் (ஜிஜிஎல்) ஒரு அரசு நிறுவனமாகும். குஜராத் ஸ்டேட் பெட்ரோநெட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதி இந்நிறுவனம். இந்நிறுவனத்தில் 54 சதவீத பங்குகளை குஜராத் ஸ்டேட் பெட்ரோநெட் லிமிடெட் கொண்டுள்ளது. 1980ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோக வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. 2024 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இந்நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாகும். இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் தளத்தை அதிகரிக்க கவனம் செலுத்துகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் சிறப்பான வளர்ச்சி கண்டு வளர்ந்துள்ளது.
2025-26ம் நிதியாண்டுக்கான திட்டமிடப்பட்ட மூலதன செலவு சுமார் ரூ.1,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஜிஜிஎல் மூலோபாய முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மூலம் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ளும் நிலையில் உள்ளது.
அதே நேரத்தில் ஆதாரங்கள மற்றும் விலை நிர்ணய இயக்கவியலில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் போட்டி நிறைந்த சூழலில் தகவமைத்து வளரும் திறனில் நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.404.20ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications