55வது GST கவுன்சில் கூட்டம் இந்த மாதம் 21 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஆயுள்காப்பீடு மற்றும் சுகாதார காப்பீட்டுகளின் தற்போதைய GST கட்டமைப்பில் இருக்கும் வரி விகிதத்தை மாற்றுவது முதல் பலவேறு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டம் மிகவும் முக்கியமானது என்பதால் மக்கள் மத்தியில் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மக்களின் செலவுகளை பெரிய அளவில் குறைக்கப்படும் என்பதாலேயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படி டிசம்பர் 21 ஆம் தேதி 55வது GST கவுன்சில் கூட்டத்தில் எந்த விஷயங்கள் எல்லாம் விவாதிக்கப்பட உள்ளன. வாங்க ஒரு ரவுண்டு பார்ப்போம்.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக, சுகாதார காப்பீடு குறித்த அமைச்சர்கள் குழு (GoM) மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இந்த பரிந்துரைகளை GST கவுன்சில் தனது ஆலோசனையின் போது தீவிரமாக ஆய்வு செய்யும். GoM பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது,
ஆயுள் காப்பீட்டு: குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு GST விலக்கு அளிப்பது முக்கிய பரிந்துரையாக உள்ளது. இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கான காப்பீட்டு கவரேஜின் விலையை குறைத்து, அதிகப்படியானோர் பயன்படுத்தும் நோக்கம் கொண்டது.
சுகாதார காப்பீட்டு: கூடுதலாக, மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட சுகாதார காப்பீட்டு திட்டங்களுக்கு GST-யை விலக்கு அளிக்க GoM பரிந்துரைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு போதுமான மருத்துவ காப்பீடு அதிகப்படியான கட்டணம் காரணமாக போதுமான பாதுகாப்பு கிடைக்காத நிலையில் இந்த வரி குறைப்பு, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தனிநபர் சுகாதார காப்பீட்டு: மேலும், அனைத்து தனிநபர் சுகாதார காப்பீட்டு திட்டங்களுக்கும் GST விகிதத்தை 5% ஆகக் குறைத்து, அதே நேரத்தில் இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை (ITC) தடை செய்ய GoM பரிந்துரைத்துள்ளது. இந்த நடவடிக்கை தனிநபர்களுக்கான சுகாதார காப்பீட்டு பிரீமியத்தின் ஒட்டுமொத்த செலவைக் குறைக்கும் நோக்கம் கொண்டது.
காலணிகள்: GST கவுன்சில் ரூ.15,000-க்கும் அதிகமான விலையுள்ள காலணிகளின் GST விகிதத்தை 18% லிருந்து 28% ஆக உயர்த்துவது குறித்து விவாதிக்கலாம்.
வாட்ச்: இதேபோல் ரூ.25,000-க்கும் அதிகமான விலையுள்ள கைக்கடிகாரங்களின் GST விகிதத்தை 28% ஆகவும் உயர்த்துவது குறித்து விவாதிக்கலாம்.
55வது GST கவுன்சில் கூட்டம் நெருங்கி வருவதால், வரி செலுத்துவோர் மற்றும் பொதுமக்கள், குறிப்பாக சுகாதாரம் மற்றும் உயிர் காப்பீட்டு பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் GST குறித்த சாத்தியமான நிவாரண நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர்.
GoM-ன் பரிந்துரைகள், அங்கீகரிக்கப்பட்டால், பல தனிநபர்களின் சுகாதாரப் பாதுகாப்பின் விலை குறைந்து மலிவானதாகும். இருப்பினும், ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கு 18% GST தொடர்ந்து விதிக்கப்படுவது சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
55வது GST கவுன்சில் கூட்டத்தின் விளைவு இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications