உலகமே தங்கம் குறித்து தான் பேசி வருகிறது, அந்த அளவிற்கு தங்கம் எனும் உலோகம் உலகம் முழுவதும் முக்கியமான ஒரு பொருளாக தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு இந்த தங்கமானது தங்க கட்டிகள் , நாணயங்களாக மாற்றி விற்பனை செய்யப்படுகின்றன.
தங்கம் பல கேரட்களில் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. 24, 22, 18, 12 கேரட் என ஒவ்வொரு கேரட்டும் அதில் எவ்வளவு சதவீதம் தங்கம் இருக்கிறது என்பதை குறிக்கிறது. என்ன தான் நாம் தலைகீழாக நின்று தண்ணீ குடித்தாலும் யாராலுமே இந்த உலகில் 100% தூய்மையான தங்கத்தை உருவாக்க முடியாது. தங்கத்தின் அதிகபட்ச தூய்மை தன்மை 99.999% ஆகும்.

அந்த வகையில் உலகிலேயே மிகச்சிறந்த தூய்மையான தங்கத்தை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய ஆறு முக்கியமான நாடுகளை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். உலக சந்தையில் இந்த நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட தங்கம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் வாங்குவார்களாம் . அந்த அளவிற்கு உயர்தரமான தூய்மையான தங்கத்தை உற்பத்தி செய்வதில் சில நாடுகள் மட்டுமே கைதேர்ந்துள்ளன .
சீனா : உலகிலேயே அதிகளவு தங்கம் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு நாடு . நவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகத் தூய்மையான தங்கத்தை உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கும் விற்பனை செய்கிறது . சீன அரசாங்கத்தை பொருத்தவரை தங்கம் உற்பத்தி மற்றும் அதன் தூய்மை தன்மைக்கு என வழிகாட்டுதல்களை நிர்ணயம் செய்திருக்கிறது. உலக சந்தையில் சீன நாட்டு தங்கம் என்றாலே அதன் சிறந்த தரத்திற்கு பெயர் போனது. சீனாவில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களும் பூமியிலிருந்து தங்கத்தை வெட்டி எடுத்து அவற்றை நகை, நாணயம் மற்றும் கட்டிகளாக மாற்றி விற்பனை செய்கின்றன.
சுவிட்சர்லாந்து: உலகிலேயே 99.99 சதவீதம் என்ற உச்சபட்ச தூய்மையான தங்கத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு நாடு என்றால் அது சுவிட்சர்லாந்து தான். இந்த நாடு தங்கள் நாட்டில் இருந்து தங்கத்தை தோண்டி எடுப்பது கிடையாது மற்ற நாடுகளில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தை வாங்கி அதனை தூய்மைப்படுத்தி 99.99% தூய தங்கமாக மாற்றி விற்பனை செய்கிறது. உலகிலேயே மிகச்சிறந்த தங்க தயாரிப்பு ஆலைகள் இங்கே உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட தங்க கட்டி என்றால் அதன் தூய்மை தன்மைக்காகவும் தரத்திற்காகவும் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாங்குவார்கள் .
ஆஸ்திரேலியா: உலகிலேயே அதிக தங்கம் உற்பத்தி செய்யக்கூடிய நாடுகளில் ஆஸ்திரேலியாவும் முக்கியமானதாக இருக்கிறது . மிக சுத்தமான சுரங்க முறைகளை பயன்படுத்தி தான் தங்கத்தையே பிரித்தெடுக்கிறார்கள் . பெர்த் மிண்ட் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை தயாரிப்பதில் உலக புகழ் பெற்றது .
அமெரிக்கா: உலக அளவில் அதிக தங்கம் செய்ய உற்பத்தி செய்யக்கூடிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் தான் அதிகமாக தங்கம் என்பது உற்பத்தி செய்யப்படுகிறது . அமெரிக்காவில் தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்காவில் தங்கத்தை பரிசோதனை செய்வதற்கு மிக வலுவான ஒரு அமைப்பும் மிகச் சரியான சட்ட விதிமுறைகளும் அமலில் இருக்கின்றன என்பதால் இந்த நாட்டு தங்கத்தின் தூய்மைக்கு என்றே தனி ரசிகர்கள் உண்டு.
கனடா: கனடா நாட்டின் மேற்கு பகுதிகளில் அதிகளவு தங்கம் என்பது உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக கனடா நாட்டு தங்க நாணயங்கள் என்றாலே உலக சந்தையில் மிகப்பெரிய மவுசு உண்டு. இங்கே தங்கத்தை தோண்டி எடுப்பதில் தொடங்கி அதனை நாணயங்கள் கட்டிகளாகவும் மாற்றுவது வரை என வழிகாட்டுதல்கள் எதுவுமே தவறாமல் சீராக பின்பற்றப்படும்.
ரஷ்யா: ரஷ்யா தன்னுடைய சைபீரியா மற்றும் கிழக்கு பிராந்திய பகுதிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கிறது. உயர்தரமான தங்கம் தயாரிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக நீடித்த நிலை தன்மை கொண்ட தங்கம் உற்பத்தி செய்யக்கூடிய நாடு என்ற பெருமை ரஷ்யாவுக்கு உண்டு. இங்கே தங்க உற்பத்தியே ஒரு நாள் கூட நிற்காது என்பதும் சிறப்பு.


Click it and Unblock the Notifications