தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் வரலாற்று உச்சத்தை அடைந்திருக்கும் வேளையில் சாமானியர்கள் இனி தங்கத்தை வாங்கவே முடியாதா என்று புலம்பிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் உலகிலேயே அதிகம் தங்க இருப்பைக் கொண்டு இருக்கும் நாடுகள் பற்றிக் கட்டாயம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பொருளாதாரம் தடுமாறும் போதும் சரி, போர் வரும்போதும் சரி தங்கத்தைத் தேடி தான் முதலீட்டுச் சந்தை நகரும். இதனால் தங்கம் எந்தக் காலத்திலும் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய தங்க இருப்புக் கொண்ட நாடுகள் குறித்து ஆய்வு செய்யும் போது வல்லரசு நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்திலேயே இருக்கும் அமெரிக்காவின் வியப்பும் அளிக்கும் வகையில் தங்கத்தைக் குவித்து வைத்துள்ளது.
உலகிலேயே அதிகம் தங்க இருப்பைக் கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சுமார் 8,133.4 டன் தங்கத்தை வைத்துள்ள அமெரிக்கா, இது உலகின் மொத்த தங்க இருப்பில் 25% க்கும் அதிகமாக வைத்துள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெர்மனி 3,359 டன் தங்கத்துடன் இரண்டாவது இடத்திலும், சர்வதேச நாணய நிதியம் 2,815 டன் தங்கத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அதிகளவிலான தங்க இருப்புகளை வைத்துள்ளன. இத்தாலி 2,451.8 டன் தங்கத்துடன் நான்காவது இடத்திலும், பிரான்ஸ் 2,435.4 டன் தங்கத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. சுவிட்சர்லாந்து 1,040.1 டன் தங்கத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
ஆசியாவில் சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை பெரிய தங்க இருப்புகளை வைத்துள்ளன. சீனா 1,980 டன் தங்கத்துடன் ஏழாவது இடத்திலும், ஜப்பான் 984 டன் தங்கத்துடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. இது தவிர ரஷ்யா 2,299 டன் தங்கத்துடன் ஆறாவது இடத்திலும், இந்தியா 806.65 டன் தங்கத்துடன் பத்தாவது இடத்தில் உள்ளன.
தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. பொருளாதார மந்தநிலை, போர் அல்லது இயற்கை பேரிடர் போன்ற நேரங்களில், தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். எனவே, பல்வேறு நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தங்கத்தை ஒரு முக்கியச் சொத்தாகக் கருதுகின்றன.
தங்கத்தின் மதிப்பு எதிர்காலத்திலும் அதிகரிக்கும் என்று மக்களும், முதலீட்டாளர்களும் நம்புகிறார்களோ இல்லையோ உலக நாடுகளின் மத்திய வங்கிகள் பெரிய அளவில் நம்புகிறது. உலகின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், தங்கத்தின் தேவை அதிகரிக்கும். மேலும், தங்கத்தின் உற்பத்தி குறைந்து வருவதால், தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும்.
More From GoodReturns

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!



Click it and Unblock the Notifications