இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் பட்ஜெட் எதிரொலியாலும், அமெரிக்க, ஆசிய, ஐரோப்பிய சந்தைகளும் சாதகமாக இருந்த காரணத்தால் தொடர்ந்து உயர்வுடன் இருந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 695.76 புள்ளிகள் உயர்ந்து 59,558.33 புள்ளிகளை அடைந்துள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 203.15 புள்ளிகள் உயர்ந்து 17,780 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக உயர்வுக்கு மிக முக்கியமான நாட்டின் முன்னணி நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள் தான்.
டெக் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனத்தில் ஒன்றான டெக் மஹிந்திரா டிசம்பர் காலாண்டில் 1,368.5 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது, இது செப்டம்பர் காலாண்டை விடவும் 2.2 சதவீதம் அதிகமாகும். இதேபோல் டெக் மஹிந்திரா-வின் வருமானம் 5.2 சதவீத உயர்வுடன் 11,451 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.
ஆனால் இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 18 சதவீதமாகச் சரிந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 3,874 பேர் இந்நிறுவனத்தில் சேர்ந்து மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,45,067 ஆக உயர்ந்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி
இன்று டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், 20 சதவீத உயர்வுடன் சுமார் 49 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் இக்காலாண்டில் 1,471 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 843 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாபர்
FMCG பிரிவில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டாபர் டிசம்பர் காலாண்டில் 2 சதவீத உயர்வுடன் 504 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 493 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 2,728 கோடி ரூபாய் வருவாய் பெற்ற டாபர் நிறுவனம், தற்போது 2,941 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இக்காலாண்டில் டாபர் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் லாபம் அளவீடுகள் 9.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஹெச்டிஎப்சி
இந்தியாவின் முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி டிசம்பர் காலாண்டில் 3,260.69 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டுப் பெற்ற 2,925.83 கோடி ரூபாய் லாபத்தை விடவும் 11.44 சதவீதம் அதிகமாகும்.
இக்காலாண்டில் ஹெச்டிஎப்சி-யின் மொத்த வருவாய் 11,707.00 கோடி ரூபாயில் இருந்து 11,783.66 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வட்டி வருமானத்தின் அளவு 4,005 கோடி ரூபாயில் இருந்து 4,284 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ்
இந்தியாவில் டாமினோஸ் பீட்சா, டன்கின் டோநட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் விற்பனை நிறுவனமான ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் டிசம்பர் காலாண்டில் 7.5 சதவீத உயர்வுடன் 133.2 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிர்வாகக் குழு ஸ்டாக் ஸ்பிலிட் அறிவித்துள்ளது. இதன் மூலம் 10 ரூபாய் முக மதிப்புக் கொண்ட பங்குகள் 5ஆக உடைந்து 2 ரூபாயாகக் குறைய உள்ளது.
டிசம்பர் காலாண்டில் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் 13.2 சதவீத உயர்வில் 1,210.8 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது. மேலும் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் கீழ் இயங்கும் டாமினோஸ் பீட்சா 1500 கிளையைத் திறந்துள்ளது.
டாடா கன்ஸ்யூமர்
டிசம்பர் காலாண்டில் டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் லாபம் 21 சதவீதம் வரையில் உயர்ந்து 288 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 5 சதவீதம் உயர்ந்து 3,208 கோடி ரூபாயை பெற்றுள்ளது. சர்வதேச உணவு வர்த்தகத்தைச் சேர்க்கவில்லை எனில் இந்நிறுவனத்தின் வருவாய் 6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் EBITDA 28 சதவீதம் வரையில் உயர்ந்து 468 கோடி ரூபாயாக உள்ளது.
அதானி போர்ட்ஸ் & SEZ
டிசம்பர் காலாண்டில் அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனத்தின் லாப அளவீடுகள் 1,576 கோடி ரூபாயில் இருந்து 1,479 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் வருவாய் 4,275 கோடி ரூபாயில் இருந்து 4423 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் லாபம் அளவீடுகள் சரிய மிக முக்கியமான காரணம் இந்நிறுவனத்தின் செலவுகள் 2259 கோடி ரூபாயில் இருந்து 2,739 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் வருவாய் அதிகரித்த போதிலும் லாபம் சரிந்துள்ளது.
கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ்
நாட்டின் முன்னணி பெயின்ட் நிறுவனமான கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் டிசம்பர் காலாண்டில் 38.7 சதவீத உயர்வில் 125.32 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 13.67 சதவீதம் அதிகரித்து 1,810.35 கோடி ரூபாயாக உள்ளது.
KPIT டெக்னாலஜிஸ்
KPIT டெக்னாலஜிஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் 64 சதவீத லாப உயர்வில் சுமார் 70.3 கோடி ரூபாயை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 42.974 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்ற நிலையில் தற்போது 70 கோடி ரூபாயை பெற்றுள்ளது.
மேலும் இக்காலாண்டில் KPIT டெக்னாலஜிஸ் வருவாய் 523.9 கோடி ரூபாய் வருவாயில் இருந்து 631 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications