வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய 10 முக்கிய காரணிகள்.. முக்கிய அம்சங்கள் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்கு சந்தையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

 

சொல்லப்போனல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொட்டு வருகின்றது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் வரலாறு காணாத உச்சத்தில் காணப்படுகின்றன.

ஐடி ஊழியர்களுக்கு இது பொன்னான நேரம்.. ஏன்.. என்ன காரணம்..! ஐடி ஊழியர்களுக்கு இது பொன்னான நேரம்.. ஏன்.. என்ன காரணம்..!

மொத்தத்தில் கடந்த சில வாரங்களாகவே வர்த்தகர்களுக்கு நல்ல லாபம் தான். எனினும் இனி வரும் வாரங்களில் எப்படி இருக்கும்? சந்தை சரிவினைக் காணுமா? அல்லது ஏற்றம் காணுமா? இனி என்ன செய்யலாம் என்ற பல கேள்விகள் டிரேடர்கள் மத்தியில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வாரத்தில் சந்தையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

அடுத்து என்ன செய்யலாம்?

அடுத்து என்ன செய்யலாம்?

இதற்கிடையில் வரும் வாரத்தில் சந்தையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சந்தையை தீர்மானிக்கும் முக்குய காரணிகள் என்னென்ன? சந்தை தொடர்ந்து ஏற்றம் காணுமா? கையில் இருக்கும் ஆர்டர்களை அப்படியே வைத்திருக்கலாமா? அல்லது புராபிட் புக்கிங் செய்யலாமா? அடுத்து என்ன செய்யலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

தொலைத் தொடர்பு துறை

தொலைத் தொடர்பு துறை

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் இருந்து வரும் தொலைத்தொடர்புத் துறைக்கு, பெரியளவில் நிவாரணம் அளிக்கும் வகையில் ஏஜிஆர் தொகை செலுத்த வேண்டிய கட்டணத்திற்கு, நான்கு வருட கால அவகாசத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும் இந்த துறையை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, இந்தத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது வரும் வாரங்களில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம்.

Array
 

Array

இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் பிரச்சனையைத் தீர்க்கவும், வங்கிகளின் சுமையைக் குறைவும், அதேவேளையில் வாராக் கடன்களுக்கு விரைவில் தீர்வு காணவும், கடனை வசூல் செய்யவும் வாரக் கடன் வங்கி அமைக்கப்படும் எனவும், இதனை ஆதரிக்க 30,600 கோடி ரூபாய் வரையிலான உத்தரவாதத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Array

Array

சென்செக்ஸ் 59,000 புள்ளிகளுக்கு மேலாகவும், இதே 17,500-க்கும் மேலாகவும் காணப்படுகின்றது. செப்டம்பரில் இதுவரையில் சென்செக்ஸ் 2.5% ஏற்றம் கண்டுள்ளது. இதே பிஎஸ்இ சந்தை மூலதனமானது 250 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 259 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

முக்கிய டேட்டாக்கள்

முக்கிய டேட்டாக்கள்

அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் எஃப்.ஓ.எம்.சி கூட்டம் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை மாற்றம் செய்யுமா? பத்திரம் வாங்குதலை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதுவும் சந்தையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Array

Array

உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்படுமா? பொருளாதாரம் குறித்த அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. ஆக இதன் தாக்கம் சந்தையில் எதிரொலிக்கலாம்.

பராஸ் டிபென்ஸ் ஐபிஓ

பராஸ் டிபென்ஸ் ஐபிஓ

பராஸ் டிபென்ஸ் அன்ட் ஸ்பேஷ் டெக்னாலஜி நிறுவனம் பங்கு வெளியீடு மூலம் 200 கோடி ரூபாய் நிதியினை திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு செப்டம்பர் 21 -23 வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை பங்கிற்கு 165 - 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்கு சந்தையில் பட்டியல்

பங்கு சந்தையில் பட்டியல்

வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளரான சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம், செப்டம்பர் 24 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 14 - 16 காலகட்டத்தில் 1283 கோடி ரூபாய் மதிப்பிலான வெளியிட்ட பங்கு வெளியீட்டில் 11.47 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அன்னிய முதலீடு வரத்து

அன்னிய முதலீடு வரத்து

இந்திய சந்தையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 17வுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய முதலீடு வரத்து 6,476 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

எனினும் உள் நாட்டு முதலீட்டாளர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி, புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 2,896 கோடி ரூபாய் வெளியேற்றம் கண்டுள்ளது.

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், நிஃப்டி 50 சற்றே சரியும் விதமாக காணப்படுகின்றது. எனினும் வரவிருக்கும் வாரத்தில் சற்று சரிந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று வலுவாகவே காணப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதோடு தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில் வரும் வாரத்தில் புராபிட் செய்தால், சந்தை சற்று சரிவினைக் காணலாம்.

பேங்க் நிஃப்டி நிலவரம்

பேங்க் நிஃப்டி நிலவரம்

பேங்க் நிஃப்டி முதல் முறையாக 38,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 38,112 என்ற உச்ச புள்ளிகளை தொட்டது. வாரக்கடன் வங்கி குறித்த அறிவிப்பானது வரும் வாரத்தில் சந்தைக்கு ஊக்கத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரும் வாரத்தில் 39,000 புள்ளிகளை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய டேட்டாக்கள்

முக்கிய டேட்டாக்கள்

சந்தையில் வரும் வாரத்தில் வரவிருக்கும் கார்ப்பரேட் டேட்டாக்கள் மற்றும் குளோபல் டேட்டாக்கள் வரவிருக்கும் வாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன. இதுவும் சந்தையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Traders must watch these 10 key factors in next week

Market latest updates.. here are 10 key factories that will keep traders busy next week
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X