நமக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காண்பிப்போம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட டாக்டரை மட்டும் தான் பார்ப்போம். ஏன்னா, அந்த டாக்டரின் கனிவான பேச்சு, சிகிச்சை அளிக்கும் விதம் நமக்கு மிகவும் பிடித்து இருக்கும்.
அமெரிக்காவில் இரப்பை குடலியல் நிபுணராக பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் பால் என்றழைக்கப்படும் பழனியப்பன் மாணிக்கம் சமூக ஊடகங்களில் தனது நகைச்சுவை அல்லது மெடிக்கல் காமெடி (மருத்துவ நகைச்சுவை) மூலம் முக்கியமான தகவல்களை அனைவரும் ரசிக்கும்படி கொடுக்கிறார்.

2020 வரை அவரது நோயாளிகள் மட்டுமே அவரது நகைச்சுவையை பாராட்டினர். சமூக ஊடகத்தின் பலனால் இன்று உலகமே அவருடன் சேர்ந்து சிரிக்கிறது. 2020 மார்ச் மாதத்தில் டாக்டர் பால் முதல் முறையாக போட்ட கோவிட்-19 தொடர்பான அவரது வீடியோ வைரலானது, அவர் மெட்காம் என்று அழைக்கும் நகைச்சுவையை உருவாக்கினார்.
முதலில் போட்ட வீடியோக்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததால், அது அவரை மேலும் பல வீடியோக்களை உருவாக்க வழிவகுத்தது. பல்வேறு மருத்துவ விஷயங்களை நகைச்சுவையாக சொன்னார். இன்று டாக்டர் பாலுக்கு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கும் மேல் பயனர்கள் உள்ளனர்.
டாக்டர் பால் ரீல்ஸ், வீடியோக்களை தவிர்த்து பல ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் அமெரிக்கா, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தனது மெட்காம் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வருகிறார்.
டாக்டர் பால் பேட்டி ஒன்றில் கூறுகையில், முன்பு நான் 100 கிலோ இருந்தேன், அப்போது வேலை செய்யும் போது படபடப்பு ஏற்பட்டது. உடல் எடையை குறைக்க ஒவ்வொரு உணவையும் முயற்சி செய்தேன் ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுடன் உண்ணாவிரத ஆய்வு திட்டத்தை தொடங்கினேன். இதில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதனை தனிப்பட்ட வாழ்க்கையிலும் செய்ய தொடங்கினேன். கிட்டத்தட்ட 25 கிலோ எடை குறைந்த பிறகு, நான் கற்றுக் கொண்ட பாடங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஒரு மருத்துவராக நான் உடல் எடையை குறைக்க மிகவும் கடினமான நேரத்தை சந்தித்தேன்.
அதேசமயம் சாதாரண மக்களுக்கு இது எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அதனால்தான் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக் கொள்ள மக்களுக்கு உதவ, இன்ஸ்டாகிராமில் ரீல்கள் உருவாக்கினேன்.
மக்களை சிரிக்க வைப்பதில் இருந்து வரும் திருப்தியை நான் விரும்புகிறேன். எனது டிப்ஸ்களை பின்பற்றிய பிறகு பலர் என்னிடம் வந்து தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்ளும்போது அவர்களின் கண்களில் கண்ணீர் தோன்றுகிறது. அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் மருத்துவமனைகளில் குறைவான நோயாளிகளே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications