ஜனவரி மாதம், அமெரிக்க ராணுவம் திடீரென வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையை எடுத்தது. அப்போது வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் நாடு கடத்தப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வெனிசுலா எண்ணெய் வளங்கள் அமெரிக்காவுக்கு சொந்தமானது என தெரிவித்த டிரம்ப் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலா கச்சா எண்ணெயை வர்த்தகம் செய்து இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். அந்த வகையில் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ராட்ரிகுயிஸ் அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த சூழலில் வெனிசுலா அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க அரசுக்கு 1000 கிலோ தங்க புதையல் கிடைத்துள்ளது.
வெனிசுலா அரசுக்கு சொந்தமான சுரங்க நிறுவனம் மினர்வென் இதற்காக டிரஃபிகுரா என்ற கமாடிட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இடைக்கால அதிபர் டெல்சியும், அமெரிக்க உள்துறை அமைச்சர் டௌக் பர்கம் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி வெனிசுலா நாட்டு அரசுக்கு சொந்தமான மினர்வென் நிறுவனம் 1000 கிலோ தங்க கட்டிகளை கமாடிட்டி டிரேடரான டிரஃபிகுராவிடம் ஒப்படைக்கும். அந்த நிறுவனம் 1000 கிலோ தங்க கட்டிகளை அமெரிக்கா அரசிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பினை பெற்றுள்ளது.
பதிலுக்கு அமெரிக்க டாலர்கள் வெனிசுலாவுக்கு கிடைக்க போகின்றன. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி பார்த்தால் பல லட்சம் டாலர்களை வெனிசுலா பெற போகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் நீண்ட காலமாக அமெரிக்கா வெனிசுலா இடையே நிலவி வந்த வேறுபாடுகள் களைந்து இரு நாடுகளும் இணைந்து செயல்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதே வேளையில் வர்த்தக ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படுத்த தொடங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது.
வெனிசுலா பொருத்தவரை தங்கள் வசம் இருக்கக்கூடிய ஆயிரம் கிலோ தங்கத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் அதற்கு மாற்றாக 160 மில்லியன் டாலர்களை பெறுகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு இந்த பணம் உதவும். அதுமட்டுமில்லாமல் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் வெனிசுலா எண்ணெய் வளங்களில் முதலீடு செய்ய முன் வரும்.
கச்சா எண்ணெய் வளம் மூலம் வெனிசுலா நாட்டு அரசு நல்ல வருமானம் பார்க்க தொடங்கும். நிதி நெருக்கடியை சமாளிக்க வெனிசுலா இத்தனை காலம் தங்கத்தை ரகசியமான முறையில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து பணமாக்கி வந்தது. தற்போது நேரடியாகவே அமெரிக்க சந்தையில் தங்கத்தை விற்பனை செய்து பணம் பார்க்க தொடங்கி இருக்கிறது. கள்ள சந்தையில் குறைந்து விலைக்கே தங்கம் விற்று வந்த வெனிசுலா இனி சந்தை விலைக்கு தங்கத்தை விற்பனை செய்து பணம் ஈட்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக சரி செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை குறைஞ்சிருக்கும் நேரத்துல தமிழ்நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு சிக்கலா!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!



Click it and Unblock the Notifications