அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு மொத்தமாக மாறிய டிரம்ப் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நியூயார்க் போஸ்ட் தளத்திற்குக் கொடுத்த பேட்டியில் ஈரான் மீதான ராணுவ தாக்குதல் என்பது முற்றிலுமாக முடிந்தது, ஆனால் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மூலம் அந்நாட்டைச் சர்வதேச சந்தையில் இருந்து தனிமைப்படுத்தப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கடற்படை முடக்கம் மூலம் ஈரான் நாட்டின் கடல் வழி போக்குவரத்தை மொத்தமாக முடக்குவதையும், புதிதாக அறிவிக்கப்பட்ட உள்ள முடக்கம் மூலம் அந்நாட்டின் தரைவழி வர்த்தகத்தையும் முடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது பெரிய செக்.

இவை அனைத்தையும் நாங்கள் ஈரானை சுற்றியுள்ள நாடுகளின் நலனுக்காகச் செய்ய உள்ளோம், மேலும் அந்நாட்டில் தற்போது பணவீக்கம் 301 சதவீதமாக உள்ளது.
இதன் மூலம் நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கடுமையான பிரச்சனைகள் உருவாகி வருகிறது என டிரம்ப் நியூயார்க் போஸ்ட் பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் சிபிஎஸ் நீயூஸ்-க்கு அளித்த பேட்டியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்யப்படும் என நான் நம்புகிறேன், இதேபோல் தேவையெனில் கடுமையான நிலைப்பாட்டையும் எடுக்கத் தயார் என்பதை fully locked and loaded என தெரிவித்துள்ளார்.
இதோடு ஈரான் எல்லையைப் பகிரும் நாடுகளின் நிலம் வழியிலும், கேஸ்பியன் கடன் வழியாகவும் நடக்கும் வர்த்தகம், ஆயுத சப்ளை ஆகியவற்றைத் தடுக்க அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான CENTCOM புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது, இதன் பெயர் Operation Iron Gate.
ஏற்கனவே அமெரிக்கா பெர்சியன் வளைகுடா வழித்தடத்தில் கடற்படை முடக்கம் மூலம் 25 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் வர்த்தகத்தை முடக்கியிருக்கும் வேளையில், தற்போதும் நிலம் வழியாக நடக்கும் வர்த்தகத்தை முடக்க உள்ளது அமெரிக்கா.
இதன் மூலம் ஈரான் உலக நாடுகளுடன் தொடர்பு இல்லாத ஒரு நாடாக மாறக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
மேலும் அமெரிக்கா பாதுகாப்புத் துறை இனி ஈரான் மீது ராணுவ தாக்குதலை நடத்தாது என டிரம்ப் அறிவித்தது மூலம் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தினமும் சரிந்து வரும் வேளையில், 1.40 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 91.27 டாலராக உள்ளது, WTI கச்சா எண்ணெய் விலை 1.53 சதவீதம் சரிந்து 85.52 டாலராக உள்ளது.
மேலும் அமெரிக்கா ஈரான் மீதான முடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டாம் என வளைகுடா நாடுகள் கேட்டுக்கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
