2 மாத உயர்வில் தங்கம் விலை.. டிரம்ப் வந்ததும் ஷாக்! இந்திய மக்களுக்கு நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தங்கத்தின் விலை நவம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு அதிகப்படியான உயர்வைப் பதிவு செய்துள்ளது, அதாவது டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு தங்கம் விலை பெரிய அளவில் சரிந்தது, ஆனால் டிரம்ப் பதவியேற்ற பின்பு வரி விதிப்பு, கட்டுப்பாடு, குடியுரிமை விதிகளில் மாற்றம் என அடுக்கடுக்காக 70க்கும் அதிகமான உத்தரவுகளில் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்டார்.

இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தை, டாலர் மதிப்பு ஆகியவை சரிந்துள்ளது, மறுமுனையில் தங்கம், பிட்காயின் போன்றவை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது. நவம்பர் 6ஆம் தேதிக்குப் பின்பு தொடர்ந்து மந்தமாக இருந்த தங்கத்தின் விலை இன்றைய வர்த்தகத்தில் 2,726 டாலரை எட்டி பலருக்கும் ஷாக் கொடுத்தது. தங்கத்தின் விலை உயர்வு, சந்தையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 மாத உயர்வில் தங்கம் விலை.. டிரம்ப் வந்ததும் ஷாக்! இந்திய மக்களுக்கு நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

இந்திய ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்றாலும், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்துள்ளது. இந்த உயர்வு நாளை இந்திய சந்தையில் அதிகரிக்கும். கடைசியாக நவம்பர் 5ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2742 டாலராக இருந்தது, கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பின்பு இன்று 2728 டாலருக்கு உயர்ந்துள்ளது.

இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை 2710 டாலரில் இருந்து 2728 டாலருக்கு உயர்ந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பின்பு பதிவாகியுள்ள அதிரடி உயர்வாகும். இதனால் நாளை தங்கம் விலை இந்தியாவில் தடாலடியாக உயரக்கூடும். எனவே தங்கம் வாங்கத் திட்டமிட்டால் இன்றே வாங்கிக்கொள்ளுங்கள்.

அமெரிக்க அதிபராகியுள்ள டொனால்டு டிரம்ப் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளுக்கும் பிர்பரவரி மாதம் முதல் வரியை விதிப்பதாகக் கூறியிருப்பது முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் சரிவுக்கு ஒரு முக்கியமான காரணியாகும். சீனா மீது தான் டிரம்ப் வர்த்தக போர் தொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளை முதலில் அடித்துள்ளார் டிரம்ப்.

இதனால் தங்கம் தற்போது முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு சொத்தாக மாறியுள்ளது. தங்கத்தின் விலை உயர்வுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் முதலீட்டிலும் லாபம் குறைந்துள்ளது. இந்த வருவாய் குறைவுக்கு முக்கிய காரணம், இந்த ஆண்டில் இரண்டு முறை வட்டி விகிதங்களைக் குறைக்க பெடரல் ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் என்ற சந்தை நிபுணர்கள் கணித்துள்ளது தான். இதனால் பத்திர சந்தையில் இருந்தும் முதலீடுகள் வெளியேறி வருகிறது.

அமெரிக்காவில் பணவீக்கம் மிதமாக இருக்கும் காரணத்தால் 2 முறை அந்நாட்டு மத்திய வங்கி வட்டியை குறைத்தால் அமெரிக்க அரசு கருவூலப் பத்திரங்களின் லாபம் குறையும். இது பொதுவாக நடக்கும் ஒரு விஷயம், ஆனால் பத்திர சந்தையை விட்டு வெளியேறும் முதலீடுகள் பங்குச்சந்தைக்குச் செல்வது வழக்கம் ஆனால் தற்போது தங்கம் மீது குவிந்துள்ளது, இதற்கு காரணம் டிரம்ப்-ன் வரி விதிப்பு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+