அமெரிக்காவின் அதிபராக 2வது முறை டிரம்ப் பதவியேற்றிய பின்பு வர்த்தக போரை உருவாக்கும் வகையில் வரியை உயர்த்தியதும், ஈரான் மீதும் தாக்குதல் நடத்தியதும், ரஷ்யா - உக்ரைன் போரை கட்டுப்பாடுத்துவதை தாண்டி 2 முக்கியமான விஷயங்களை செய்தார்.
1. அமெரிக்க அரசு கருவூலத்தில் தங்கம், வெள்ளி, பத்திரங்களில் முதலீடு செய்து சேர்ப்பது போலவே கிரிப்டோகரன்சிகளை சேர்க்க கொள்கையை வகுத்தார்.
2. அமெரிக்க ஊழியர்களின் பென்ஷன் நிதிகளை சேமிக்கும் 401K திட்டத்தில் இருக்கும் பணத்தை மாற்று சொத்துக்களில் முதலீடு செய்யும் உரிமையில் டிரம்ப் சில தளர்வுகளை கொடுத்தார். முன்பு 401K திட்ட நிதிகளை பத்திரங்கள், பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் உரிமை இருந்தது, இனி PE முதலீடுகள், ரியல் எஸ்டேட், கிரிப்டோகரன்சி வரையில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இவ்விரு திருத்தம் மூலம் அமெரிக்க முதலீட்டு சந்தையில் கிரிப்டோகரன்சி மீது பெரும் தொகை முதலீடாக திருப்ப வழிவகை செய்யப்பட்டது. டிரம்ப் கிரிப்டோ-வின் காதலர் என்றால் மிகையில்லை, ஆட்சியை பிடித்ததும் தன் பெயரிலும், தனது மனைவி பெயரிலும் கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்து பெரும் தொகையை சம்பாதித்து வருகிறார்.

இதற்கு அடுத்தக்கட்டமாக டிரம்ப் குடும்பம் ஒட்டுமொத்த கிரிப்டோ நெட்வொர்க்-ல் பங்கு பெறவும், பணம் சம்பாதிக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக டிரம்ப் குடும்ப நிறுவனம் மாபெரும் டீல்-ஐ முடித்துள்ளது.
டொனால்ட் டிரம்பின் மீடியா நிறுவனமான டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி குரூப் கார்ப் (டிஜேடி), ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு அதிர்ச்சி கலந்த வியப்பான அறிவிப்பை வெளியிட்டது. ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடக தளத்தை இயங்கும் நிறுவனம் தான் இந்த டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி குரூப். இந்த நிறுவனத்தில் டிரம்ப் 53 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்.
இப்படியிருக்கையில் கடந்த வாரம் வெளியான அறிவிப்பின் மூலம் கிரிப்டோகரன்சி உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கிரிப்டோ.காம் மற்றும் Yorkville என்ற நிறுவனங்களுடன் இணைந்து, 6.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள க்ரோனோஸ் (CRO) டிஜிட்டல் சொத்து கருவூலத்தை (CRO Digital Asset Treasury) உருவாக்கும் திட்டத்தை டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி குரூப் அறிவித்தது.
இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்தில் டிரம்ப் குடும்பம் பெரும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்ததிற்கும் கிரிப்டோகரன்சி சந்தைக்கும் என்ன தொடர்பு..? மிகப்பெரிய தொடர்பு உள்ளது, வாங்க முழு கதையும் சொல்கிறேன்.

க்ரோனோஸ் என்றால் என்ன..?
க்ரோனோஸ் (CRO) என்பது கிரிப்டோகரன்சி உலகில் ஒரு டிஜிட்டல் பணம் போன்றது, எப்படி பிட்காயின், எதிரியம், கார்டானோ போன்றவை இருக்கிறதோ இதேபோல தான் க்ரோனோஸ். இது கிரிப்டோ.காம் என்ற பிரபலமான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தால் உருவாக்கப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் 2.22 சதவீதம் சரிந்து 0.2527 டாலராக உள்ளது. இது உலகளாவிய கிரிப்டோ சந்தையில் 21 வது இடத்தில் 8.49 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் உள்ளது.
Cronos blockchain-ல் CRO டோக்கன்கள் பயன்படுத்தி, நீங்கள் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்தலாம், Staking செய்து வெகுமதி பெறலாம் அல்லது DeFI (வங்கி சேவைகள் போன்ற டிஜிட்டல் கடன்) மற்றும் என்எஃப்டி (டிஜிட்டல் கலைப் பொருட்கள்) போன்றவற்றில் பங்கேற்கலாம்.
CRO கட்டமைப்பு வேகமாக, குறைந்த செலவு கொண்ட பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது, இதனால் எளிதாக பணம் அனுப்பவோ அல்லது பெறவோ உதவுகிறது.

CRO Digital Asset Treasury என்றால் என்ன?
CRO டிஜிட்டல் சொத்து கருவூலம் என்பது டிரம்ப் மீடியா நிறுவனம் உருவாக்கிய ஒரு பெரிய முதலீட்டு திட்டமாகும். இதில் க்ரோனோஸ் (CRO) டோக்கன் சேமித்து, அதன் மதிப்பை உயர்த்தவும், பிளாக்செயினில் பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்தும் செயல்முறையில் பங்கேற்று அதன் மூலம் வருமானம் ஈட்டவும் முயல்கிறது இந்த மூன்று நிறுவன கூட்டணி. இதற்கான முதல் படி என்னவென்றால் சந்தையில் இருக்கும் CRO கிரிப்டோ-வை கைப்பற்றுவது தான்.
முதல் படி:
இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக டிரம்ப் மீடியா கூட்டணி நிறுவனங்கள் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள CRO டோக்கன்களுடன் கைப்பற்ற தொடங்குகிறது. இந்த 1 பில்லியன் டாலர் டோக்கன் என்பது உலகில் உள்ள அனைத்து CRO டோக்கன்களின் கிட்டத்தட்ட 19 சதவீதமாகும். இதனுடன் 200 மில்லியன் டாலர் ரொக்கம், 220 மில்லியன் டாலர் வாரண்ட்கள் மற்றும் 5 பில்லியன் டாலர் கடன் என மொத்தத்தில் 6.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள CRO டோக்கனின் கொண்ட கருவூலத்தை உருவாக்கப்பட உள்ளது.

வேலிடேட்டர் - இதுதான் பிஸ்னஸ் ஐடியா
டிரம்ப் மீடியா, க்ரோனோஸ் பிளாக்செயினில் ஒரு வேலிடேட்டர் நோடை (validator node) இயக்கும் என்று கூறியுள்ளது. வேலிடேட்டர் என்பது, பிளாக்செயினில் பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்தும் ஒரு கண்காணிப்பாளர் போன்றது.
கிரிக்கெட்டில் எப்படி ஒரு அம்பையர் ஒவ்வொரு பந்தையும் சரியானதா என உறுதி செய்கிறாரோ அதேபோல் கிரிப்ரோ பரிவர்த்தனையில் வேலிடேட்டர் நோடு என்பது ஒரு அம்பையர் போன்றது.
இதன் மூலம் க்ரோனோஸ் இனி சரியான பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கும் ஒரு வேலிடேட்டர் நோடு ஆக இயங்கும். பரிவர்த்தனைகளை சரிபார்ப்பது மூலம் புதிய டோக்கன்களை சம்பாதிக்க உதவும் ஒரு வாய்ப்பும் உள்ளது. இதனால் CRO வேலிடேடர் நோடு வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் கரன்சி சந்தையில் நீண்ட கால வருமானம் ஈட்டும் சொத்து என்று இந்த நிறுவனம் விளக்குகிறது.
க்ரோனோஸ் பிளாக்செயினின் சிறப்புகள்
க்ரோனோஸ் (CRO) என்பது கிரிப்டோ.காம் நிறுவனம் உருவாக்கிய ஒரு கிரிப்டோகரன்சி. இது பிட்காயின் போல ஒரு மதிப்பு சேமிக்கும் கருவியாகவோ அல்லது ஈதிரியம் போல பல்வேறு ஆப்களை இயக்கும் தளமல்ல.
மாறாக, க்ரோனோஸ் ஒரு உயர் செயல்திறன் கொண்ட பிளாக்செயின் கட்டமைப்பாகும். இது வேகமாகவும், எளிதில் விரிவாக்கம் செய்யக்கூடிய மற்றும் பிற நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது குறைந்த செலவில், அதிவேகத்தில் ஸ்மார்ட் கான்ட்ராக்ட்களை செயல்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது.
இதோடு பிற முக்கிய பிளாக்செயின்களுடன் எளிதில் இணைக்கலாம், இதனால் நிதி, வர்த்தகம் மற்றும் பொது உள்கட்டமைப்பு என பலதரப்பட்ட அமைப்புகள், வர்த்தகத்தில் இனி க்ரோனோஸ் முக்கிய பங்காற்றும். க்ரோனோஸ் பிளாக்செயின் கட்டமைப்பில் மட்டும் அல்லாமல் NFTs மற்றும் Web3 ecosystems-களிலும் இயங்கும்.
இதன் மூலம் ஒட்டுமொத்த டிஜிட்டல் அசர்ட் துறையும் ப்ரூஃப்-ஆஃப்-அதாரிட்டி சேவைக்கான க்ரோனோ-வை பயன்படுத்தலாம். பயனர்கள் CROவை கட்டணங்களுக்கு பயன்படுத்தலாம், வேலிடேட்டர்களுக்கு ஸ்டேக் செய்யலாம் அல்லது நெட்வொர்க்கை பாதுகாக்கலாம். இப்படிய டிரம்ப-ன் CRO Digital Asset Treasury கிரிப்டோ சந்தையில் பெரும் ஆதிக்கத்தை விரைவில் பெற உள்ளது.
More From GoodReturns

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications