அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். வெனிசுலா எண்ணெய் மீது அமெரிக்காவின் தடை தொடரும் என்றும், அந்நாட்டின் அரசு பாதுகாப்பான தலைவர் கையில் மாற்றம் செய்யும் வரையில் அமெரிக்கா வெனிசுலா நாட்டை நிர்வகிக்கும் என்றும் வெளிப்படையாக தெரிவித்தார். இது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் தனது உரையில், வெனிசுலா எண்ணெய் மீதான தடை முழுமையாக அமலில் இருப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க படைகள் எண்ணெய் பாதுகாப்புக்கு மட்டுமே அனுப்பப்படும், நாட்டை நிர்வகிக்க அல்ல என்றும் தெளிவுபடுத்தினார். இது வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை பாதுகாக்கும் நோக்கிலும் அதேவேளையில் கச்சா எண்ணெய் வளத்தை கைப்பற்றும் நோக்கமும் இருப்பதை டிரம்ப் தெளிவுப்படுத்தினார்.

வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் டிரம்ப் கூறுகையில், மார்கோ ரூபியோ, Pete Hegseth, Dan Caine போன்ற அமெரிக்க தலைவர்கள் வெனிசுலாவை நிர்வகிப்பார்கள் என்றார். ரூபியோ வெனிசுலா துணை அதிபருடன் பேசியுள்ளதாகவும், அந்நாட்டை மீண்டும் சிறப்பாக்குவோம் என்றும் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான மரியா கோரினா மசாடோ அதிபராக வருவது கடினம் என்றும் டிரம்ப் கூறினார். அவர் நல்ல பெண்மணி என்றாலும், அந்நாட்டில் ஆதரவு மற்றும் மரியாதை இல்லை என்றார். இது வெனிசுலாவின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் தலையீடு நாட்டின் எண்ணெய் வளத்தை பாதுகாக்கும் என்றாலும், உள்நாட்டு அரசியல் குழப்பத்தை அதிகரிக்கலாம். உலக நாடுகள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications