அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கம் இறக்குமதிக்கு எந்தவிதமான கூடுதல் வரியும் விதிக்கப்படாது என தெரிவித்துள்ளார். "Gold will not be Tariffed!" (தங்கத்திற்கு வரி விதிக்கப்படாது) என அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்து வெளியான US Customs and Border Protection கடிதம் ஒன்றில், வழக்கமாக விற்பனை செய்யப்படும் இரண்டு வகையான தங்கக்கட்டிகள் ஒரு கிலோ மற்றும் 100 அவுன்ஸ் (சுமார் 2.8 கிலோ) மீது வரி விதிக்கப்படும் தகவல் வெளியானது.

இதனால் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. தங்கத்துக்கு எதிர்பார்க்கப்படும் வரியின் காரணமாக, தங்க வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதுடன், எதிர்கால விலைகளும் சரிவே இல்லாமல் உயரும் நிலைக்கு சென்றிருந்தது. ஆனால், தற்போது டிரம்பின் புதிய விளக்கத்தால், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின் படி, கடந்த வாரம் அமெரிக்கக் சுங்கத் துறையின் இணையதளத்தில் வெளியான ஒரு உத்தரவு, தங்க வர்த்தகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதில், அமெரிக்காவில் மிக அதிகமாக வர்த்தகம் செய்யப்படும் தங்கக் கட்டிகள் குறிப்பாக 1 கிலோ மற்றும் 100 அவுன்ஸ் மீது, இறக்குமதி வரிகள் விதிக்கப்படக் கூடும் என தகவல் பரவியது. இதனால், உலகளாவிய தங்க விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்படும் என்ற அபாயம் உருவானது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், தங்கம் மற்றும் பிற சிறப்பு பொருட்கள் மீதான வரிகள் குறித்த தவறான தகவல்களைத் தெளிவுப்படுத்தும் வகையில், ஒரு செயல் உத்தரவு தயாராகி வருகிறது என உறுதிப்படுத்தினார்.
ஜூலை 31ஆம் தேதியிட்ட அமெரிக்க சுங்கத் துறையின் கடிதம், முதன்முதலில் Financial Times வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த கடிதம் வெளியாகியதும், தங்க விலைகள் உயர்ந்தன. குறிப்பாக டிசம்பர் மாத தங்கக் கொள்முதல் ஒப்பந்தங்கள் Comex எனப்படும் உலகின் மிகப்பெரிய எதிர்கால சந்தையில் சாதனை உயர்வை பதிவு செய்தன. டிரம்பின் reciprocal tariffs என்ற கொள்கையின் கீழ், இந்த தங்கக் கட்டிகளுக்கு 39% வரி விதிக்கப்படும் என்ற தகவல் வெளியானது. இதனல், சுவிட்சர்லாந்துக்கு மிகப்பெரிய பொருளாதார அபாயமாக கருதப்பட்டது.
சுவிட்சர்லாந்து தங்கத்தை சுத்திகரிக்கும் மற்றும் உலகளாவிய அளவில் பரிமாற்றம் செய்யும் முக்கிய மையம் என்பதால், இந்தக் குழப்பம் உலக தங்க சந்தையை தாறுமாறாக்கக்கூடிய நிலையை உருவாக்கியதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தங்க சந்தை விநியோக நிபுணர் ரோஸ் நார்மன், "இந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டதாகக் கேள்விப்படுவது மிகவும் நிம்மதியாக உள்ளது. இது தங்க சந்தைக்கு பெரிய நிவாரணமாகும். ஏனெனில், சந்தை பாதிப்பு எவ்வளவு பெரியதாக இருந்திருக்குமோ அதை கணிக்கவே முடியாது" என்று கூறினார்.
டிரம்ப் தங்கம் மீது வரி விதிக்கப்படாது என அறிவித்த பிறகு, அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 2.4% குறைந்து, ஒரு அவுன்ஸ் 3,407 டாலராகி விட்டன. அதேசமயம் spot gold விலை 1.2% குறைந்து 3,357 டாலராக குறைந்தது. Barrick Mining எனப்படும் தங்க சுரங்க நிறுவனத்தின் பங்குகள், அதே நேரத்தில் 2.8% குறைந்தன. உலகின் மிகப்பெரிய தங்க சுரங்க நிறுவனம் Newmont பங்குகள் சற்று மட்டுமே விழுந்து $68.87 ஆக இருந்தன.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications