பத்த வச்சிட்டியே பரட்ட!! குறைய போகும் வட்டி!! எகிறப் போகும் தங்கம், வெள்ளி விலை!!

உலக அளவில் ஏற்கனவே தங்கம், வெள்ளி விலைகள் உச்சத்தில் இருக்கின்றன. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1.05 லட்சத்தை கடந்து விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் 300 ரூபாயை நெருங்கும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டிருக்கும் ஒரு அறிவிப்பு தங்கம், வெள்ளி விலையை மேலும் உயர்த்த போகிறது.

அமெரிக்க அரசாங்கம் டிசம்பர் மாதத்திற்கான தங்கள் நாட்டின் பணவீக்க விகிதங்களை வெளியிட்டு இருக்கிறது. இதனை குறிப்பிட்டு இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி குறைப்பு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என நிர்பந்தம் செய்திருக்கிறார். அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு 2.6 சதவீதமாக இருக்கிறது. இது 2.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை விட குறைவாகவே பதிவாகி இருக்கிறது.

பத்த வச்சிட்டியே பரட்ட!! குறைய போகும் வட்டி!! எகிறப் போகும் தங்கம், வெள்ளி விலை!!

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கும் டிரம்ப், நாட்டின் பணவீக்கம் வெகுவாக குறைந்துள்ளது இப்போது பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோமி பாவெல் பெரிய அளவிலான வட்டி குறைப்பை எடுத்தாக வேண்டும் என கூறியிருக்கிறார். ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு செய்த அவர் பணவீக்க விகிதங்கள் வெளியாகிவிட்டன, பெடரல் வங்கி தலைவர் பாவெல் தற்போது வட்டி குறிப்பு நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும் என்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் மத்திய வங்கி தலைவர் ஜெரோமி பாவெலுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. டிரம்ப் தொடர்ந்து வட்டியை குறைக்க வேண்டும் என ஜெரோமி பாவெல்லுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறார். தன்னுடைய பேச்சுகளுக்கு இணங்கவில்லை என கூறி பாவெல் மீது குற்றவியல் விசாரணை கூட நடத்த தொடங்கியுள்ளார்.

ஆனால் பாவெல்லை பொறுத்தவரை டிரம்ப் கூறிய உடனே வட்டியை குறைக்க முடியாது நாட்டின் அனைத்து பொருளாதார சூழல்களையும் கண்காணித்த பின்னரே வட்டி குறைப்பை மேற்கொள்ள முடியும் என்கிறார். இதன் காரணமாக பாவெலுக்கும் டிரம்புக்கும் அடிக்கடி வார்த்தை மோதல் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.

கூடிய விரைவில் பாவெலின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அமெரிக்க ஃபெடரல் வங்கி தலைவராக தனக்கு சாதகமாக செயல்படக்கூடிய ஒரு நபரை பதவியில் அமர்ந்து போகிறார் டிரம்ப். இந்த சூழலில் அதற்கு முந்தைய மத்திய வங்கி நிதி கொள்கை குழு கூட்டத்தில் பாவெல் வட்டி குறைப்பு நடவடிக்கையை அறிவிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பட்சத்தில் மேலும் தங்கம், வெள்ளி விலை உயரும். கடந்த ஆண்டில் வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியான போதெல்லாமே தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கவே செய்துள்ளது.

வெனிசுலா மீதான ராணுவ நடவடிக்கை, கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளை பிடிப்பதற்காக மேற்கொண்டு வரும் பரிசீலனை, ஈரானில் அமெரிக்க ராணுவம் களமிறங்க தயாராகி வருவது உள்ளிட்ட சர்வதேச அரசியல் மோதல்கள் மற்றும் புவிசார பதட்டங்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலையை அதிகரிக்க செய்திருக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைத்தால் தங்கம், வெள்ளி விலையை இனி கையிலேயே பிடிக்க முடியாது என்பதே உண்மை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+