சென்னையில் நேற்றைய தினம் தடாலடியாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் சரிவடைந்து சாமானிய மக்களுக்கு சற்றே நிம்மதியை தந்திருக்கிறது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் போர் தொடர்பாக வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான் தங்கத்தின் விலை சரிவடைவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.
சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் 110 ரூபாய் விலை உயர்வு கண்டு 13,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே செவ்வாய்க்கிழமை அன்று கிராமுக்கு 100 ரூபாய் சரிவடைந்து 13,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை உயர்வு கண்டு 14,050 ரூபாய்க்கு விற்பனையானது. அவ்வளவுதான் இனி தங்கத்தின் விலை உயர்வில் தான் இருக்கப் போகிறது என மக்கள் கவலைப்பட்ட நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் சரிந்து 13,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,12,400 ரூபாய்க்கு விற்பனையான ஆபரண தங்கம் இன்று 800 ரூபாய் விலை சரிவடைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நான்கு வர்த்தக நாட்களில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டு நாள் உயர்ந்திருக்கிறது இரண்டு நாள் சரிவடைந்திருக்கிறது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று மாற்றமடைந்திருக்கிறது ஒரு கிராம் தங்கம் 109 ரூபாய் விலை சரிவடைந்து 15,218 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 872 ரூபாய் விலை சரிவடைந்து 1,21,744 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,635 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 600 ரூபாய் விலை குறைந்து 93,080 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
தங்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நேற்று ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்த வெள்ளி இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது. 265 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளி இன்று 10 ரூபாய் விலை குறைந்து 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு ஈரான் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது இதுதான் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications