ஈகாமர்ஸ் கொள்கையில் மாற்றம் வேண்டும்.. அடம் பிடிக்கும் ரிலையன்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஈகாமர்ஸ் துறை மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இத்துறையில் பாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட்-க்கு வரைமுறை செய்யக் கொள்கை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் இயங்கும் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

ஈகார்மஸ் நிறுவனங்கள்

ஈகார்மஸ் நிறுவனங்கள்

மத்திய அரசின் DPIIT அமைப்பு ஈகார்மஸ் நிறுவனங்கள் மத்தியில் நடத்திய முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் கைப்பற்றிய அர்பன் லேடர், இன்போஎட்ஜ், ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஈகாமர்ஸ் கொள்கையில் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

ரிலையனஸ் நிறுவனத்தின் இந்தக் கோரிக்கைக்கு அமேசான், பிளிப்கார்ட், உதான், க்ரோபர்ஸ், பெப்பர்ப்ரை ஆகிய நிறுவனங்கள் அரசிடம் தற்போது நடைமுறையில் இருக்கும் ஈகாமர்ஸ் கொள்கைகள் போதுமானதாக உள்ளது என்றும். இதன் எவ்விதமான மறு ஆய்வும், மறுசீரமைப்பு தேவையில்லை என ரிலைன்யன்ஸ் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் கூட்டணி
 

ரிலையன்ஸ் கூட்டணி

ரிலையன்ஸ் கூட்டணி நிறுவனங்கள் இந்தியாவில் அன்னிய முதலீடு கொள்கைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்றும், பிற நிறுவனங்கள் இந்தியாவில் அன்னிய முதலீடுகள் தேவையில்லாமல் கொட்டப்பட்டு வருகிறது என்றும் எனத் தெரிவித்துள்ளது.

கடினமான கட்டமைப்பை

கடினமான கட்டமைப்பை

மேலும் ரிலையன்ஸ் நிறுவனம், வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டில் இயங்கும் இந்திய நிறுவனங்கள் முதலீட்டுக் கொள்கைகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மிகவும் கடினமான கட்டமைப்பை உருவாக்கியது எனக் குற்றம்சாட்டியது.

அரசுக்குப் பதில்

அரசுக்குப் பதில்

இதைக் கடுமையாக எதிர்த்த நிறுவனங்கள், அரசிடம் முறைகேடுகளை விசாரணை செய்யப் பல கருவிகளும், வழிகளையும் வைத்துள்ளது. கொள்கைகளை மாற்றுவதை விடவும் முதலில் ஆய்வு செய்வது சிறந்தது என அமேசான், பிளிப்கார்ட், உதான், க்ரோபர்ஸ், பெப்பர்ப்ரை ஆகிய நிறுவனங்கள் அரசிடம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tussle between Reliance and global ecommerce giants on foster investment

Tussle between Reliance and global eCommerce giants on foster investment
Story first published: Saturday, March 27, 2021, 8:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X