தமிழ்நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமமாக விளங்கும் டிவிஎஸ் குழுமத்தின் கிளை நிறுவனங்களின் உரிமையை (Ownership) மறுசீரமைப்புச் செய்ய டிவிஎஸ் குடும்பம் முடிவு செய்துள்ளது.
இந்த மறுசீரமைப்பு மூலம் கூட்டு நிர்வாகத்தில் இருக்கும் நிறுவனங்களைத் தனி நிறுவனமாக மாற்றும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மறுசீரமைப்பு மூலம் டிவிஎஸ் குடும்ப உறுப்பினர்களுக்கு வர்த்தகம் மற்றும் நிறுவனத்தின் முழு உரிமை கொடுக்கப்படும். இதனால் கிராஸ் ஹோல்டிங் இருக்காது.
மேலும் நிறுவனங்கள் மத்தியிலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் ராயல்டி கொடுப்பது முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது.

டிவிஎஸ் குழுமத்தின் டிவிஎஸ் மோட்டார்ஸ், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, வீல்ஸ் இந்தியா எனப் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில், இந்நிறுவனத்தைத் தத்தம் குடும்ப உறுப்பினர்களின் முழுக் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டும் வர முடிவு செய்யப்பட்டு இதற்கான அறிக்கையை நிறுவனங்களின் செயலாளர்களிடமும், பங்குச்சந்தையிலும் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒப்படைக்கப்படும் நிறுவனங்களின் பங்குகளுக்கான உரிமை முழுமையாகக் கொடுக்க வேண்டும் என டிவிஎஸ் குடும்ப உறுப்பினர்கள் எதிர்பார்த்த காரணமாகத் தத்தம் நிறுவனப் பங்குகளை நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்படுவதாகப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் படி சுரேஷ் கிருஷ்ணா மற்றும் அவர்களின் மகள்கள் சேர்ந்து சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தையும், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை வேணு ஸ்ரீநிவாசனும், இவரது குடும்பம் டிவிஎஸ் கிரெடிட், சுந்தரம் க்ளேடன் மற்றும் இதர நிறுவனங்களை நிர்வாகம் செய்ய உள்ளனர்.
இதேபோல் ஆர் தினேஷ் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்யப்போகிறார். இதேபோல் ஷோபனா ராமசந்திரன் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனத்தை நிர்வாகம் செய்யப் போகிறார்.
இந்தப் புதிய மாற்றத்தால் நிறுவனத்திலும், நிர்வாகத்திலும், வர்த்தகத்திலும் எவ்விதமான மாற்றமும் இருக்காது என டிவிஎஸ் குடும்பம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
மேலும் டிவிஎஸ் ஹோல்டிங் நிறுவனம் தற்போது டிவி சுந்தரம் அவர்களின் 3வது மற்றும் 4வது தலைமுறையினரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இக்குழுமத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களை இக்குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிவி சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் பிரைவேட் லிமிடெட், சுந்தரம் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சதர்ன் ரோட்வேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்த கூட்டணி தான் டிவிஎஸ் ஹோல்டிங் நிறுவனம்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications