அமெரிக்கா-வியட்நாம் ஒப்பந்தம்.. பங்குச்சந்தை பக்கம் திரும்பிய முதலீட்டாளர்கள்.. தங்கம் விலை சரிவு..!

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே, யாரும் கணிக்காத அளவுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வாகவே காணப்படுகிறது. பல நாடுகளுக்கு இடையேயான திடீர் போர் சூழ்நிலை மற்றும் அதனால் ஏற்படும் சர்வதேச பதற்றம் ஆகியவை தங்கத்தின் விலையை தாக்கி, அது ஒருபோதும் இல்லாத வேகத்தில் உயர்ந்ததும், பின்னர் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்தும் காணப்படுகிறது.

இந்த சூழலில், அமெரிக்காவுக்கும்ம் வியட்நாமுக்கும் இடையே ஏற்பட்ட புதிய வர்த்தக ஒப்பந்தம், சர்வதேச சந்தைகளில் நிலவிய பதற்றத்தை குறைத்துள்ளது. அதன் விளைவாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான தேவை குறைந்ததால், தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை 0.3% குறைந்து அவுன்சுக்கு $3,345.57 ஆகவும், அமெரிக்கா சந்தையில் விற்கப்படும் எதிர்கால தங்க விலை (Gold Futures) 0.1% வீழ்ச்சி கண்டு $3,356.60 ஆகவும் உள்ளது.

அமெரிக்கா-வியட்நாம் ஒப்பந்தம்.. பங்குச்சந்தை பக்கம் திரும்பிய முதலீட்டாளர்கள்.. தங்கம் விலை சரிவு..!

இதன் மூலம், தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை குறைந்து, விலை குறைந்துள்ளது. எனவே, அமெரிக்கா-வியட்நாம் வர்த்தக ஒப்பந்தம் உலக சந்தைகளில் சற்றே அமைதியை கொண்டு வந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஒப்பந்தம் உலகளவில் தொழில் மற்றும் வர்த்தக நிலைத்தன்மைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிக ஆபத்துள்ள சொத்துகளுக்குத் திரும்பத் துவங்கியதுதான் தங்க விலையைக் குறைத்த முக்கிய காரணம் என கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா - வியட்நாம் இடையேயான ஒப்பந்தம் வர்த்தக சந்தைகளுக்கு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது. ஏனெனில் சந்தைகள் முன்னதாக மோசமான நிலையில் இருந்தன. தற்போது அமெரிக்கா, வியட்நாம் பொருட்களுக்கு 20% வரியை குறைப்பதாக உறுதி செய்துள்ளது. மேலும், மூன்றாம் நாட்டு வழியாக வியட்நாம் மூலம் அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 40% உயர்ந்த வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், வியட்நாம் அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களை 'பூஜ்ய வரி' (zero percent tariff) விகிதத்தில் இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வியட்நாம், அமெரிக்காவின் பத்தாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் வெளிவந்ததும், உலக நிதி சந்தைகளில் நம்பிக்கை பெருகி, வியட்நாம் சிறிது நேரத்துக்கு முன்னணி இடத்தைப் பெற்றது. மேலும், இன்று வெளியிடப்படவுள்ள அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. பொருளாதார நிபுணர்கள் ஜூன் மாதத்திற்கு 1,10,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது மே மாதம் பதிவான 1,39,000 வேலைவாய்ப்புகளுக்கு முந்தைய எண்ணிக்கையை விட குறைவாகும். இந்த அறிக்கை எதிர்பார்ப்புக்கு கீழாக இருந்தால், அமெரிக்க கூட்டாட்சி வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர். இதன் விளைவாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்வதற்கான சூழல் உருவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், தற்போது அமெரிக்கா-வியட்நாம் வர்த்தக உறவு மேம்பட்டதால் சந்தையில் பதற்றம் குறைந்துள்ளது. இதனால், பல முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பங்குச் சந்தை போன்ற முதலீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதேபோல் தங்கத்தை தொடர்ந்து, இன்னும் சில விலையுயர்ந்த உலோகங்களான, வெள்ளி 0.6% வீழ்ச்சியை சந்தித்து அவுன்சுக்கு $36.36 ஆகவும், பிளாடினம் 0.5% குறைந்து $1,412.13 ஆகவும், பாலேடியம் 0.4% குறைந்து $1,150.28 ஆகவும் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+