இந்திய விமான நிலையங்களில் விமானத்தில் பயணம் செய்பவர்களின் சரி அவர்களை வழி அனுப்புவதற்காகவும் வரவேற்பதற்காகவும் வருகை தருபவர்களும் சரி ஒரு டீ, காபி வாங்கி அருந்த வேண்டும் என்றால் கூட பல ஆயிரங்களில் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அந்த அளவிற்கு விமான நிலையங்களில் இயங்கக்கூடிய கடைகளில் உணவுப் பொருட்களின் விலை சாதாரண இடங்களில் கிடைப்பதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விலை 100 ரூபாய், ஒரு டீயின் விலை 300 ரூபாய், காபியின் விலை 300 ரூபாய் என விலையை கேட்டாலே தலை சுற்றி விடும். விமான நிலையத்தில் இருந்து வாடகை காரில் வீட்டுக்கு செல்ல எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ அது தான் ஒரு டீயின் விலை. இது நடுத்தர வர்க்க பயணிகளுக்கு பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தி தந்தது.

ரயில் நிலையங்களை போலவே விமான நிலையங்களிலும் மத்திய அரசே மலிவு விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை நிறுவக்கூடாதா என பயணிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். பல்வேறு பிரபலங்களும் கூட விமான நிலையங்களில் உணவுப் பொருட்களின் விலை அநியாயமாக இருக்கிறது என தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட வண்ணம் இருந்தனர்.
ஆனால் இனி அந்த பிரச்சினை கிடையாது. மத்திய அரசு சார்பாக உதான் யாத்ரி கஃபே என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு பிரதாமன் விமான நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு டீன் விலை என்ன தெரியுமா 10 ரூபாய் தான் ஒரு சமோசாவின் விலை 20 ரூபாய் தான். நடுத்தர மக்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணத்தை தந்திருக்கிறது.
ஐஐடி மும்பையின் முன்னாள் மாணவி ஒருவர் புனே விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபேயில் குறைந்த விலைக்கு டீ, சமோசா கிடைப்பதை கண்டு வியப்புடன் வெளீயிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இந்த உதான் யாத்ரீ கஃபே சென்னை விமான நிலையத்திலும் கூட நிறுவப்பட்டுள்ளது. உள்நாட்டு முனையம் 1இல் (domestic terminal 1) அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு தண்ணீர் பாட்டில் 10 ரூபாய், ஒரு காபி 20 ரூபாய், டீ 10 ரூபாய், சமோசா, கச்சோரி உள்ளிட்ட தின்பண்டங்கள் 20 ரூபாயிலிருந்து கிடைக்கும். பல்வேறு பொருட்களும் குறைந்தபட்சம் 10 இல் இருந்து 20 ரூபாய்க்கு உள்ளாகவே கிடைத்துவிடுகிறது. எனவே விமான நிலையம் செல்லும் பயணிகள் இந்த கடைக்கு சென்று டீ அருந்தலாம் திண்பண்டங்கள் உண்ணலாம், இதனால் பெரும் தொகையை சேமிக்க முடியும்.
முதலில் கொல்கத்தா விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உதான் யாத்ரீ கஃபே திட்டம் தற்போது சென்னை , அகமதாபாத், புனே, புவனேஸ்வர், இடாநகர் மற்றும் விஜயவாடா ஆகிய நகர விமான நிலையங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications