இங்கிலாந்து நாட்டின் ரீடைல் பேஷன் விற்பனையாளரான Superdry, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் ஒரு கூட்டணி நிறுவனத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் வேளையில் அந்நாட்டின் முன்னணி பிராண்டான Superdry மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
Superdry பிராண்ட் பல விஷயங்களில் தடுமாறி வரும் வேளையில், இந்த கூட்டணி மூலம் Superdry தனது அறிவுசார் சொத்துக்களை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு சுமார் 48.27 மில்லியன் டாலருக்கு விற்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் பிரிட்டன் நாட்டின் ரிலையன்ஸ் குழுமத்தின் வர்த்தக கனவு மீண்டும் விரிவாக்கம் அடைய துவங்கியுள்ளதை உறுதி செய்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே hamleys நிறுவனத்தை வாங்கியிருக்கும் வேளையில் தற்போது Superdry நிறுவனத்தை வாங்குவதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கும் வேளையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் 18000 க்கும் மேற்பட்ட ரீடைல் கடைகளை கொண்டு இருக்கும் Reliance Retail மற்றும் Superdry இணைந்து உருவாக்கும் கூட்டணியில் 76% மற்றும் 24% பங்குகளை பெற உள்ளனர்.
இந்த கூட்டணி மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் Superdry பிராண்ட் செயல்பாடுகளை கண்காணிக்கும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் சில்லறை விற்பனையாளரான Superdry, மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து மிகவும் குறைவான ஆர்டர்களுடன் மட்டுமே பெற்று வரும் வேளையில் இந்த பிராண்டின் வர்த்தகம் மற்றும் நிதி நிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் உடனான ஒரு ஒப்பந்தத்தைத் தவிர, Superdry ஆகஸ்ட் மாதத்தில் ஹில்கோ கேபிட்டல் உடன் 25 மில்லியன் பவுண்ட், இது இரண்டாம் நிலைக் கடன் வசதியாகும். இதேபோல் பான்ட்ரி பே கேபிட்டலுடன் 80 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்துள்ளது. Superdry இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது பங்கு விற்பனை மூலம் சுமார் 12 மில்லியன் பவுண்ட் நிதியை திரட்டியது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ரீடைல் ஆலியா பட் நிறுவனத்துடன் கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications