அரசை ஏமாற்றும் பெரும் பணக்காரர்கள்.. அட பாவிகளா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரிச் செலுத்துவதில் இருந்து தப்பிக்கச் சாமானிய மக்களை விடவும் அதிகம் முயற்சி செய்வது பெரும் பணக்காரர்கள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அமெரிக்கா போன்ற பெரும் பொருளாதார நாடுகளில் இருந்து இந்தியா போன்ற வளரும் நாடுகள் வரையில் இதே நிலை தான்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஜெப் பைசோஸ் உட்படப் பல பெரும் நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் பல வருடங்களில் ஒரு டாலர் கூட வரி வருமானம் செலுத்தாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது பெரும் பணக்காரர்கள் சில வருமான வரிச் செலுத்துவதில் இருந்து தப்பிக்கப் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

வருமான வரி தாக்கல் செய்வோருக்கு இது குட் நியூஸ்.. இனி அஞ்சலகத்திலேயே ITR செய்யலாம்..! வருமான வரி தாக்கல் செய்வோருக்கு இது குட் நியூஸ்.. இனி அஞ்சலகத்திலேயே ITR செய்யலாம்..!

 பெரும் பணக்கார இந்தியர்கள்

பெரும் பணக்கார இந்தியர்கள்

இந்தியாவில் கடந்த சில வருடமாகப் பெரும் பணக்கார இந்தியர்கள் வெளிநாட்டில் நூறு கோடி ரூபாய் மதிப்பிற்கும் அதிகமான தொகைக்கு ஜம்ரோ லைப் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வு செய்து முதலீடு செய்து வருவது அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.

 லைப் இன்சூரன்ஸ் திட்டம்

லைப் இன்சூரன்ஸ் திட்டம்

அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் எந்தொரு இந்தியரும் வெளிநாட்டு அமைப்பு மற்றும் நிறுவனங்களிடம் இருந்து லைப் இன்சூரன்ஸ் பெறுவதற்குத் தடை செய்யப்பட்டு உள்ள வேளையிலும், சிலர் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து லைப் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கியுள்ளனர்.

 அமலாக்கத் துறை நோட்டீஸ்

அமலாக்கத் துறை நோட்டீஸ்

இந்நிலையில் இந்தப் பிரச்சனையை அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ள வேளையில், வெளிநாட்டு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பெற்ற 25 பணக்காரர்களுக்கு அமலாக்கத் துறை விதிகளை மீறியதற்கான நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளது.

 ஜம்போ லைப் இன்சூரன்ஸ்

ஜம்போ லைப் இன்சூரன்ஸ்

வெளிநாட்டில் வாங்கப்படும் இந்த ஜம்போ லைப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கான ப்ரீமியம் மிகவும் குறைவு என்பது மட்டும் அல்லாமல் சிங்கிள் ப்ரீமியம் வசதியில் கிடைக்கும் காரணத்தால் பெரும் பணக்காரர்கள் இதை முதலீடாகக் கணக்கிட்டு வருமான வரியிலும் சலுகை பெற்று வருகின்றனர்.

 வருமான வரி ஏய்ப்பு

வருமான வரி ஏய்ப்பு

இதேபோல் பெரும் பணக்காரர்கள் மறைமுகமாக வெளிநாட்டில் வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு இத்தகைய இன்சூரன்ஸ் வாங்கும் போது வருமானத்தில் கீழ் கணக்கிற்கே இந்த முதலீடும், இன்சூரன்ஸ்-ம் வராமல் மறைக்கப்படுகிறது.

 ரிசர்வ் வங்கியின் LRS திட்டம்

ரிசர்வ் வங்கியின் LRS திட்டம்

இந்தியாவில் பல பணக்கார குடும்பங்கள் ரிசர்வ் வங்கியின் Liberalised Remittance Scheme திட்டத்தின் கீழ் முதலீடு பெயரில் ஒரு ஹெட்ஜ் பண்ட் அல்லது குளோபல் ஈக்விட்டி நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது இந்த ஜம்ரோ லைப் இன்சூரன்ஸ் திட்டத்தை Add On ஆக அளிக்கப்படுகிறது.

 2,50,000 டாலர் முதலீடு

2,50,000 டாலர் முதலீடு

ரிசர்வ் வங்கியின் Liberalised Remittance Scheme திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 2,50,000 டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டுப் பத்திரங்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்ய அனுமதி செய்யப்படுகிறது, ஆனால் நேரடியாக லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ultra Rich Indians Buying Jumbo Life Insurance in abroad: ED issues Notices

Ultra Rich Indians Buying Jumbo Life Insurance in abroad: ED issues Notices
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X