அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கும் முன் இதை படிங்க..!

சென்னை: இந்தியாவின் பாரம்பரிய முதலீட்டில் ஒன்று தங்கம் வாங்குவது. தங்கம் வாங்குவதற்கு முடிவெடுப்பதற்கு முன்பு அதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்பதே நிபுணர்கள் கருத்தாக உள்ளது. பணவீக்கத்திற்கு எதிராக தங்கம் ஒரு நல்ல முதலீடாகக் கருதப்படுகிறது. என்றாலும், அதன் மூலம் பங்குகள், பத்திரங்கள் போன்ற நிலையான வருமானத்தை வழங்க முடியாது. அதேபோல் நீங்கள் தங்க நகைகளை வாங்கி, ஏதேனும் லாக்கரில் வைத்திருந்தால் அதற்கும் நீங்கள் தனியாக செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்த பதிவில் தங்கத்தில் முதலீடு செயும்போது என்னென்ன செலவுகள் இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

இந்தியர்கள் அட்சய திருதியை நாளன்று தங்கம் மற்றும் வெள்ளி போன்ற மதிப்பு மிக்க சொத்துக்களை வாங்குவதற்கு ஏற்ற நாளாக கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 'த்ரிதியை திதி' அன்று நாடு முழுவதும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை கொண்டாடப்பட உள்ளது.

 அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கும் முன் இதை படிங்க..!

அட்சய திருதியை அன்று மக்கள் ஏன் தங்கம் வாங்குகின்றனர்?: தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்குவதற்கு அட்சய திருதியை ஏற்ற நாளாக கருதப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் தற்போது தங்கத்தின் நுகர்வு அதிகரித்துள்ளது. என்னதான் விலை உயர்வு ஏற்பட்டாலும், ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கி சேமித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

எனினும், தங்கம் வாங்குவதற்கு முன்பு தங்கத்தில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஆராய வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது

தங்கத்திற்கான வரி விதிப்பு: தங்கத்திற்கான வரி, நீங்கள் வாங்கும் அளவைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் வெவ்வேறு முதலீட்டு விருப்பங்கள் இருக்கும். அதாவது நகைகள், டிஜிட்டல் தங்கம், தங்கப் பத்திரங்கள் போன்றவை அடங்கும் இதில் அடங்கும். எனவே முதலீட்டாளர்களின் விருப்பத்தேர்வை பொறுத்து, இந்த வகை முதலீடுகளுக்கு வரி விதிக்கப்படுகிறது.

தங்க நகைகளாக வாங்குவதற்கான வரி: தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள், ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் போன்றவற்றில் முதலீடு செய்பவர்களுக்கு, அவர்கள் வாங்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்து 3 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதேபோல் இந்த தங்கத்தினை விற்கும் நேரத்திலும், நீங்கள் வரி செலுத்த வேண்டி இருக்கும்.

தங்கத்தை வாங்கி மூன்று ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு, அதற்குப் பிறகு அதை விற்றால் 20.8 சதவீத நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) செலுத்த வேண்டும். அதன்படி வரியில் 20 சதவீதமும், 4 சதவீத செஸ் வரியும் இருக்கும்.

அதுவே நீங்கள் தங்கத்தை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் விற்பனை செய்தால் குறுகிய மூலதன ஆதாய வரி (STCG) செலுத்த வேண்டும். எனவே நீங்கள், வரி செலுத்துபவராக 30 சதவீத வரி பிரிவின் கீழ் இருந்தால், உங்கள் தங்கத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் 30% சதவீத வரியை செலுத்த வேண்டி இருக்கும்.

டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்கப் பத்திரங்களுக்கான வரி விதிப்புகள்: டிஜிட்டல் தங்கமும் நீங்கள் கடைகளில் வாங்கும் தங்க நகைகள் போலவே கருதப்படுகின்றன. 36 மாதங்களுக்கு மேல், அதாவது மூன்று வருடங்களுக்கு மேல் வைத்திருந்தால் 20.8 சதவீத விகிதத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) செலுத்த வேண்டும்

தங்கப் பத்திரம் (SGB): SGBகள் ஆண்டுக்கு 2.5% வருமானத்தை அளிக்கின்றன மற்றும் 8 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளன. மேலும் நீங்கள் வருடத்திற்கு இரண்டு முறை பணம் பெறுவீர்கள். இந்த வட்டி விகிதம் முதலீட்டு ஆண்டைப் பொறுத்து மாறுபடலாம். இந்த பத்திரங்களிலிருந்து நீங்கள் சம்பாதிக்கும் வட்டிக்கு உங்கள் வருமான வரிக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். ஆனால், அவை முதிர்ச்சியடையும் போது நீங்கள் பெறும் எந்த லாபத்திற்கும் வரி இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+