தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு.. களைகட்டும் பட்ஜெட் திருவிழா..!

டெல்லி: நடப்பு கணக்கு பற்றாக்குறையை பாதிக்கும் என்றாலும், நகை ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்று, இதை அறிந்தவர்கள் கூறியுள்ளதாக லைவ் மிண்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 10% ஆக இருந்த தங்கம் இறக்குமதி வரியை 12.5% ஆக அதிகரித்தார்.

இதனால் தங்கம் இறக்குமதி குறையும் என்றும் கருதப்பட்டது. மத்திய அரசு எதிர்பார்த்தை போலவே இறக்குமதி குறைந்துள்ளது. ஆனால் இதனால் நகை ஆபரண ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரி குறைக்கப்படலாம்

வரி குறைக்கப்படலாம்

நாட்டில் அதிகரித்து வரும் தங்கம் இறக்குமதியை கட்டுக்குள் கொண்டு வரவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை கருதியும் மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுத்தது, ஆனால் அரசு எதிர்பார்த்தது போல் இறக்குமதி குறைந்தாலும், மறுபுறம் நகை ஏற்றுமதியும் படு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதிப்பு இருந்தாலும், வரி குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதிகளவு இறக்குமதி

அதிகளவு இறக்குமதி

இந்தியா அதிகளவு தங்கம் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் ஒன்று. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் தங்கம் பெருமளவில் ஆபரணங்களாக வடிவமைக்கப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். அதிலும் தங்க நகை ஆபரண ஏற்றுமதியின் முன்னணியில் உள்ள நாடான இந்தியாவில், கடந்த ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் நவரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி சுமார் 1.5% குறைந்து $20.5 பில்லியனாக குறைந்துள்ளது.

இறக்குமதி வீழ்ச்சி

இறக்குமதி வீழ்ச்சி

கடந்த 2018 - 2019ல் தங்கம் இறக்குமதி மதிப்பு 3% குறைந்து, $32.8 பில்லியனாக குறைந்துள்ளது. ஆனால் இந்த வீழ்ச்சியானது ஜூலை - செப்டம்பர் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க உதவியது என்றும் கூறப்படுகிறது. இதே போல் கடந்த 2019 - 20ம் ஆண்டிலும் கடந்த ஆண்டை போலவே நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர, இந்த வீழ்ச்சி உதவியதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

எவ்வளவு இறக்குமதி?

எவ்வளவு இறக்குமதி?

இந்தியா ஆண்டுதோறும் 800 - 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நல்ல தேவை

நல்ல தேவை

இந்தியாவில் வடிவமைக்கப்படும் தங்க ஆபரணங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தேவை அதிகமாகவே உள்ளது. ஆக இது அவசரமானது. வரி குறைப்பு தேவையான ஒன்று. இது ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான ஒன்று என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிசம்பரில் வீழ்ச்சி

டிசம்பரில் வீழ்ச்சி

கடந்த டிசம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி வெறும் 39 டன்னாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுவே கடந்த நவம்பர் மாதத்தில் 152 டன்னாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க உதவியதாகவும் கூறப்படுகிறது. எனினும் ஏற்றுமதியில் கோட்டை விட்டுள்ளது கவனிக்கதக்கது.

பட்ஜெட் ஆலோசனை

பட்ஜெட் ஆலோசனை

நடப்பு வரவிருக்கும் பட்ஜெட்டுக்காக ஏற்கனவே பொருளாதார நிபுணர்களிடமும், மூத்த தொழில்துறையினர் மற்றும் பல நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், தங்கம் இறக்குமதி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

என்ன எதிர்பார்ப்பு

என்ன எதிர்பார்ப்பு

தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் அது இந்தியாவின் தங்க ஆபரண ஏற்றுமதியை இது ஊக்கமளிக்கும் என்பது நகை விற்பனையாளர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆக இறக்குமதி வரியை 4 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பது ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதித் துறையினரின் நீண்டகால கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

தங்க கடத்தல் அதிகரிப்பு

தங்க கடத்தல் அதிகரிப்பு

நாட்டில் தங்கம் இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி விகிதங்கள் தங்கம் இறக்குமதியை குறைத்துள்ள தான். ஆனால் மறுபுறம் தங்க கடத்தலையும் ஊக்குவித்துள்ளது. ஆக இது சட்ட விரோதமான தங்கம் நுழைவுக்கும் வழி வகுக்கிறது என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+