பெட்ரோல் மற்றும் டீசல்-ஐ மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கீழ் கொண்டு வருவதற்குத் தயாராக உள்ளது.
ஆனால் மாநிலங்கள் இந்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ளச் சாத்தியமில்லை என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கட்கிழமை தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகமாக இருக்கும் நிலையில் மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் எரிபொருளை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தான் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மத்திய அரிசின் நிலைப்பாட்டைக் குறித்துப் பேசினார்.
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வருவதற்கு, மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசுகள் பெட்ரோல், டீசல்-ஐ ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்தால், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டிக்குள் எரிபொருளை கொண்டு வர எல்லா நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பது தான் என்னுடைய புரிதல் அதை எப்படி அமல்படுத்துவது என்பது தனிப் பிரச்சனையாக இருப்பதால் அந்தக் கேள்வி நிதியமைச்சரிடம் கேட்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மதுபானம் மற்றும் எரிசக்தி
மதுபானம் மற்றும் எரிசக்தி ஆகியவை மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டும் முக்கிய வர்த்தகப் பொருட்களாக இருப்பதால், அவற்றை ஜிஎஸ்டி-க்குள் சேர்க்கும் நடவடிக்கைக்கு மாநிலங்கள் ஒப்புக்கொள்வது வாய்ப்புகள் இல்லை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சுட்டிக்காட்டினார்.
ஹர்தீப் சிங் பூரி
கடைசியாக லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்குச் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் விவாதத்திற்கு முன் வைக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததை மத்திய அமைச்சர் கூறினார்.
விலை குறைப்பு
எரிபொருட்களின் விலையில் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த ஒரு வருடத்தில் இந்தியா மிகக் குறைந்த அளவிலான விலை உயர்வையே கண்டுள்ளது என்று கூறினார்.
அமெரிக்கா
வட அமெரிக்காவில் ஒரே ஆண்டில் எரிபொருள் விலை 43 சதவீதம் உயர்ந்தது, ஆனால் இந்தியாவில் இரண்டு சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மக்கள் அடுத்தது எப்போது பெட்ரோல் விலை உயரும் எனத் தன்னைக் கேட்பதாக இந்தக் கேள்விக்குக் கிண்டலாகப் பதில் அளித்தார் ஹர்தீப் சிங் பூரி.
எரிபொருள் தட்டுப்பாடு
அண்டை நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையில் இந்தியாவில் குறைவான அளவிலேயே விலை உயர்த்தப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார் ஹர்தீப் சிங் பூரி.
மத்திய மாநில அரசுகளின் வரி
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராமல் இருக்கும் இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தங்களது விருப்பம் போல் விலையை உயர்த்த முடியும். இதன் வாயிலாக மத்திய மாநில அரசு வரி விதிப்பில் அதிக வருமானம் பெறுவது மத்திய அரசாக உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications