இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி தளங்களில் ஒன்றாக இருக்கும் சோமேட்டோ கடந்த ஆண்டு மக்கள் அதிகம் தேடிய தேடல்கள் மற்றும் ஆர்டர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் 4940 பேர் சோமேட்டோவில் "காதலியை" தேடியுள்ளனர். இதில் 40 பயனர்கள் "துல்ஹான்" என்று சோமேட்டோவில் தேடியுள்ளனர் என நிறுவனம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தளங்கள் போன்றவற்றிலும் அடிக்கடி மக்கள் வினோதமாக தேடிய விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும். அப்படித்தான் சோமேட்டோவிலும் பலர் மணப்பெண் மற்றும் காதலி என தேடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். சோமேட்டோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதோடு எந்தெந்த ஊர்களில் இருந்து அதிக ஆர்டர்கள் வந்தது என்ற விவரங்களையும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2024-ஆம் ஆண்டில் டெல்லி NCR பிற மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேஷம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளையெல்லாம் வென்று ஆர்டர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் மட்டும் 12.4 கோடி ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் பிற மாநிலங்களில் 10 கோடி ஆர்டர் பெறப்பட்டுள்ளன.
வெளியான அறிக்கையின்படி பெங்களூரில், மும்பையை விட 30 லட்சம் கூடுதல் ஆர்டர்கள் பெறப்பட்டாலும் வருவாயைப் பொறுத்த வரையில் மும்பை தான் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக பெங்களூருவில் மே மாதம் 12-ஆம் தேதி அன்று 3 கோடி ஆர்டர்கள் பெறப்பட்டன. அதே நேரம் ஜனவரி 29-ஆம் தேதி அன்று 16.8 லட்சம் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.
புத்தாண்டு தினத்தன்று விரைவு வர்த்தகத் தளங்களின் உணவு விநியோகம் மற்றும் இதர சேவைகளுக்கு அதிக தேவை ஏற்பட்டது. பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், செப்டோ போன்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஆர்டர்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
2023-ஆம் ஆண்டின் புத்தாண்டு தின கொண்டாட்டங்களின் போது கிடைத்த ஆர்டர்களை விட இந்த ஆண்டு ஆர்டர்கள் அதிகரித்துவிட்டன. இன்று மாலை 5 மணி அளவில் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களை விட அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்தது என்று பிளிங்கிட் நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் தனது X பதிவில் பதிவிட்டிருந்தார்.
அதோடு பிளிங்கிட் மட்டும் ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகள் தங்களுடைய அதிகாரப்பூர்வ பதவிகளை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்காக டெலிவரி பணியை செய்து தனித்துவமான முறையில் புத்தாண்டை கொண்டாடி தங்கள் அனுபவத்தை X தளத்தில் பகிர்ந்தனர்.


Click it and Unblock the Notifications