சென்னை: யெஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் போன்ற பெரிய பேங்குகள் தங்களின் சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கான சேவை கட்டணங்களில் மாற்றம் செய்துள்ளன. சில சேவைக் கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது, மேலும் சில மே 1, 2024 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த மூன்று வங்கிகளால் மாற்றம் செய்யப்பட்ட வெவ்வேறு சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கான சேவை கட்டணங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
ஐசிஐசிஐ பேங்க் சேமிப்பு சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கான சேவை கட்டணங்கள்: செக் புக், IMPS, ECS / NACH டெபிட் ரிட்டர்ன்ஸ், ஸ்டாப் பேமெண்ட் கட்டணங்கள் மற்றும் சில சேவைகளின் கட்டணங்களில் ஐசிஐசிஐ பேங்க் திருத்தியுள்ளது. ஐசிஐசிஐ பேங்கின் இணையதளத்தில் வெளியான செய்திகளின் படி இந்த சேவை கட்டணங்கள் மே 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேவை கட்டண விவரங்களை கீழே பார்ப்போம்.

டெபிட் கார்டு ஆண்டு கட்டணம் ரூ.200 மற்றும் கிராமங்களில் இருப்பவர்களுக்கு ரூ.99 ரூபாய். ஒரு வருடத்தில் 25 செக் லீப்களுக்கு மேல் பயன்படுத்தினால், அதன் பின் பயன்படுத்தும் ஒவ்வொரு லீப்களுக்கும் ரூ. 4 சேவை கட்டணம் வசூலிக்கப்படும். DD / PO - ரத்து செய்யும் பட்சத்தில் ஒரு முறைக்கு ரூ. 100 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.
இம்மிடியேட் பேமென்ட் சர்வீஸ்களில் ஒரு பரிவர்த்தனைக்கு, ரூ. 1000 என்றால், ரூ 2.50 சேவை கட்டணமும், ரூ 1000 முதல் ரூ 25,000 வரை, ரூ. 5 சேவை கட்டணமும், ரூ. 25,000 முதல் ரூ. 5,00,000 வரை, ரூ 15 சேவைக் கட்டணமும் வசூல் செய்யப்பட உள்ளது. சிக்னேச்சர் அட்டஸ்டேஷன்க்கு ரூ. 100 சேவை கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
ஆக்ஸிஸ் பேங்க் சேலரி சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கான சேவை கட்டணங்கள்: ஆக்சிஸ்பேங்க் சேலரி சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கான சேவை கட்டணங்களை மாற்றியுள்ளது. ஆக்சிஸ் வங்கி இணையதளத்தின்படி, புதிய கட்டணமானது ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பிரையாரிட்டி அக்கவுண்ட்களுக்கான, காலாண்டு பேலன்ஸ்(AQB) ரூ. 200,000 ரூபாயாக இருந்தது. தற்போது இது ரூ. 200,000 சராசரி மாத இருப்பு (AMB) ஆக மாற்றப்பட்டுள்ளது.
தற்போதுள்ளது: சராசரி காலாண்டு இருப்பு (AQB) INR 200,000 ரூபாய். திருத்தப்பட்டது: சராசரி மாதாந்திர இருப்பு (AMB) INR 200,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தர்ட் பார்ட்டி ட்ரான்ஷாக்ஷன்களுக்கு இலவச வரம்பு மாதத்திற்கு 25,000 ரூபாய். இலவச வரம்புக்கு அப்பால், ஆயிரத்திற்கு 10 ரூபாய் சேவைக் கட்டணம்.
சம்பள சேமிப்புக் கணக்குகளுக்கான கட்டணம்: பின்வரும் நிபந்தனைகளுடன் கூடிய சம்பளக் கணக்குகளுக்கு மாதத்திற்கு INR 100/- வசூலிக்கப்படும்:
1. இரண்டு தொடர்ச்சியான காலண்டர் மாதங்களில் சம்பள வரவுகளைப் பெறவில்லை.
2. சம்பளம் அல்லாத பிரிவின்படி சராசரி இருப்பை பராமரிக்காதது.
யெஸ் பேங்க் சேலரி சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கான சேவை கட்டணங்கள்: யெஸ் வங்கி இணையதளத்தின்படி, “AMB குறிப்பிட்ட இடங்களில் அவ்வப்போது YES வங்கியால் வரையறுக்கப்படுகிறது. ரூ. 50,000 சேமிப்பு கணக்கு PRO மேக்ஸ்க்கு அதிகபட்ச கட்டணம் ரூ 1,000 வசூலிக்கப்படுகிறது. ரூ. 25000 சேமிப்பு கணக்கு ப்ரோ பிளஸ் / யெஸ் எசென்ஸ் எஸ்ஏ ஆம் ரெஸ்பெக்ட் எஸ்ஏ ஆகியவற்றிற்கு, அதிகபட்ச கட்டணம் ரூ 750 வசூலிக்கப்படவுள்ளது.
மேலும் சில சேவை கட்டணங்களைப் பற்றி அறிய அந்தந்த வங்கிகளின் இணையதளங்களைப் பார்வை இடவும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications