வியாழக்கிழமை அமெரிக்க ராணுவம், ஈரான் நாட்டுக்கு தொடர்புடை போராளிகள் குழுக்களுக்கு எதிராக சிரியாவில் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
சிரியா எல்லையில் ஒரு அமெரிக்க ஒப்பந்ததாரர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் நாட்டுக்கு தொடர்புடைய போராளிகள் குழுக்களும் அமெரிக்க ராணுத்திற்கு எதிராக கொடிய ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் ஐந்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றொரு ஒப்பந்தக்காரரும் காயமடைந்தனர்.
அமெரிக்க கான்டிராக்டர் மீதான தாக்குதல் மற்றும் பதிலடி ஆகிய இரண்டும் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரே நேரத்தில் பென்டகன் அறிவித்தது. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் இந்திய பங்குச்சந்தை அடுத்த வாரம் பாதிக்குமா என்பது தான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் காலையில் இருந்து அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும் பல நேரம் வியாழக்கிழமை வர்த்தகத்தை காட்டிலும் உயர்வுடன் இருந்தது. ஆனால் ஐரோப்பிய சந்தை துவக்கத்தின் போது சென்செக்ஸ் பெரிய வீழ்ச்சியை எதிர்கொண்டது. இதற்கு காரணம் ஜெர்மன் நாட்டின் Deutsche Bank.
சென்செக்ஸ், நிஃப்டி
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 398.18 புள்ளிகள் சரிந்து 57,527.10 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 131.85 புள்ளிகள் சரிந்து 16,945.05 புள்ளிகளை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை பதிவு செய்து வருகிறது.
பல பிரச்சனைகள்
ஏற்கனவே இந்திய சந்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கி நிலைகள் மூலம் பாதிக்கப்பட்டு வருகிறது, இது மட்டுமா பொருளாதார மந்த நிலை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு, ரஷ்யா உக்ரைன் போர், பணவீக்கம், கச்சா எண்ணெய் விநியோகம் ஆகியவையும் முதலீட்டு சந்தையை பாதிக்கிறது.
சிரியா எல்லை
இதற்கிடையில் சிரியா எல்லையில் அமெரிக்கா ராணுவத்தின் வான்வழி தாக்குதல் மூலம் மத்திய கிழக்கு சந்தையில் உருவாகியுள்ள பதற்றமான நிலை இந்திய பங்குச்சந்தை உயர்வதற்கான வாய்ப்புகளை கட்டாயம் பாதிக்கும் என சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தை
தற்போது இருக்கும் நிலையில் இந்திய பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் எந்த நாடும் புதிய geo-political tension-ஐ ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இதனால் குறுகிய கால முதலீடுக்கு மாற்று வழி அல்லது பாதுகாப்பான முதலீட்டு தளத்தை தேர்வு செய்யவும் வழியுறுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications