அமெரிக்க மத்திய வங்கி ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுத்து இருக்கிறது . இந்த அறிவிப்பு உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது . இந்த கூட்டத்தில் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரம் சூழல், பணவீக்கம் , வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது . இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஃபெடரல் வங்கியின் தலைவரான ஜெரோமே பாவெல் வெளியிட்டார்.

அப்போது 25 அடிப்படை புள்ளிகள் வரை ஃபெடரல் வங்கியின் பெஞ்ச் மார்க் வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் என்பது 3.50% முதல் 3.75% என்ற வரம்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஃபெடரல் வங்கி தெரிவித்திருக்கிறது.
இது தவிர அமெரிக்காவில் வேலை வாய்ப்பு மந்த நிலை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் மட்டும் 75 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும். இது தனி நபர் கடன், கிரெடிட் கார்டு மற்றும் பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைக்க செய்யும் . அதே வேளையில் பத்திரங்களில் செய்த முதலீடு, வங்கி சார்ந்த முதலீடுகளுக்கான வட்டி வருமானத்தையும் குறைக்கும்.
அமெரிக்காவில் பணவீக்கம் சமீப மாதங்களில் குறைந்துள்ளது , இருந்தாலும் ஃபெடரல் வங்கி நிர்ணயம் செய்து 2 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படவில்லை. இதன் காரணமாகவே இப்படி ஒரு வட்டிக் குறிப்பு நடவடிக்கையை அமெரிக்க மத்திய வங்கி எடுத்திருக்கிறது. அண்மையில் தான் அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 43 நாட்கள் செயல்படாமல் முடங்கிப் போய் கிடந்தது. இதனால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பாலிசி முடிவினை எடுக்க உதவும் முக்கிய தரவுகள் எதுவும் வெளியாகவில்லை.
வட்டி குறைப்பு முடிவை எடுக்க வேண்டிய 12 உறுப்பினர்களில் 9 பேர் 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கலாம் என்றும் 3 பேர் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்க வேண்டும் என்றும் கூறியதால் முதலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். 2026 ஆம் ஆண்டிலும் இது போன்ற வட்டி குறைப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு நாட்டின் பொருளாதாரம், பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகிய தரவுகளை பார்த்து தான் முடிவெடுக்க வேண்டும் என ஜெரோமி பாவெல் கூறியுள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை நிச்சயமாக தங்கம் , வெள்ளியின் விலையை உயர்த்தும். ஏற்கனவே இரண்டு நாட்களாக வட்டி குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளிலேயே தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. இந்நிலையில் வட்டி குறைப்பு அறிவிப்பே வெளியிடப்பட்டு விட்டது என்பதால் இனி வரும் நாட்களில் தங்கம் விலை உயரும். இதற்கு முன்பு வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்ட போதெல்லாம் தங்கம் விலை சராசரியாக 3% வரை உயர்ந்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை வட்டியை குறைத்து இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். 25 அடிப்படை புள்ளிகள் என்பது நான் எதிர்பார்த்ததை விட குறைவு எனவும் 50 அடிப்படை புள்ளிகள் வட்டியை குறைத்து, உலகிலேயே குறைந்த வட்டி என்ற நிலைக்கு கொண்டு வந்திருந்திருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார் .
அடுத்த வரும் கூட்டத்தில் வட்டி குறைப்பு இருக்குமா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் அடுத்த ஓராண்டுக்கு வட்டி உயர்வு இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் டிரம்ப் அரசு பெடரல் வங்கிக்கு புதிய தலைவரை நியமனம் செய்ய உள்ளதால் அவரை பொறுத்தும் வட்டி மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

அட்சய திருதியை: தங்கம் Pre- Booking செய்வதால் நமக்கு என்ன லாபம்? Pre- Bookingஇல் கவனிக்க வேண்டியது என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?



Click it and Unblock the Notifications