தங்கம் விலை தாறுமாறா ஏறப் போகுது: ஈரான் மீது போர் தொடுக்க தயாரானது அமெரிக்க ராணுவம்!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அவ்வப்போது இரு நாடுகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபடும், நிலைமை சற்றே தீவிரமடையும் பின்னர் தணிந்துவிடும். ஆனால் இந்த முறை அமெரிக்காவின் நடவடிக்கை ஈரான் மீது பயங்கர தாக்குதல் நடத்த அடித்தளமாக அமைந்துள்ளது.

ஈரான் மீது முழுமையாக தாக்குதல் நடத்தும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா கையில் எடுத்திருப்பது தான் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி உவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. செவ்வாய் கிழமை நட்ந்த பேச்சுவார்த்தையில் பெரிய உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கு மத்தியில் அமெரிக்க அரசாங்கம் தங்களுடைய போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் ஈரானை நோக்கி அனுப்பி வைத்திருக்கிறது.

தங்கம் விலை தாறுமாறா ஏறப் போகுது: ஈரான் மீது போர் தொடுக்க தயாரானது அமெரிக்க ராணுவம்!!

இத்தகைய சூழலில் ஹீரோ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் டிரம்ப் அனுமதி கொடுத்தால் போதும் சனிக்கிழமையிலிருந்து ஈரான் மீது போர் தொடுப்பதற்கு அமெரிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என செய்தி வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் டொனால்ட் ட்ரம்பிடம் போர் தொடுப்பதற்கான அனைத்தும் தயாராக இருக்கின்றது, சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தலாம் என தெரிவித்திருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

இதனை அடுத்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப் தான் இறுதி முடிவு எடுக்க இருக்கிறார். தன்னுடைய மூத்த ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல் தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. இல்லை என்றால் இரவோடு இரவாக தாக்குதல் நடத்தி பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது தற்போது ராணுவ தாக்குதல் நடத்தினால் அதனால் அந்த பிராந்தியத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகள் நேரிடும், எந்த மாதிரியான எதிர் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும், உலக பொருளாதார மற்றும் உலக வர்த்தகம் ஆகியவற்றில் என்னென்ன தாக்கம் ஏற்படும் என்பன உள்ளிட்டவை குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.

முன்னதாக ஈரான் அமெரிக்காவோடு ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார் டிரம்ப். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஆலோசகர்களுள் ஒருவர் ஆக்ஸியாஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறி இருக்கிறார். ஈரான் மீது அமெரிக்கா சராசரியாக ஒரு வாரம் வரை தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் , இஸ்ரேலும் அமெரிக்காவோடு இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு அருகே போர் கப்பல், விமான தாங்கி போர்க்கப்பலையும் நிலை நிறுத்தி இருக்கிறது. ஒரு வேளை டிரம்ப் உத்தரவிட்டு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால். உலகளவில் பெரிய பதற்றமே உண்டாகும். ஈரானும் பதில் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் சனிக்கிழமை முதல் அடுத்தடுத்த பதற்றங்களுக்கு பஞ்சமிருக்காது.

தங்கம் விலை தாறுமாறா ஏறப் போகுது: ஈரான் மீது போர் தொடுக்க தயாரானது அமெரிக்க ராணுவம்!!

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க தயாரகிறது என்ற தகவல் வெளியான உடனேயே தங்கம் , வெள்ளி விலைகள் உயர தொடங்கிவிட்டன. நாளையும் தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது. சனிக்கிழமை முதல் தாக்குதல் தொடங்கினால் அடுத்த வாரம் முதல் தங்கம் விலை தாறுமாறாக உயர்வதை யாராலும் தடுக்க முடியாது.

ஏற்கனவே தங்கம் , வெள்ளி ஆகிய இரண்டுமே வரலாற்று உச்சபட்ச விலையை எட்டி தற்போது தான் குறைந்துவருகின்றன. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1.33 லட்சத்தையும் வெள்ளி ஒரு கிலோ 4.2 லட்சத்தையும் எட்டின. தற்போது இரண்டுமே விலை குறைந்த நிலையில் ஈரான் போர் பதற்றம் மீண்டும் இந்த விலைக்கு இவற்றை இட்டு செல்ல வாய்ப்புள்ளது. இன்று தங்கம் விலை ஒரு சவரன் 1.16 லட்சத்திற்கும், வெள்ளி ஒரு கிலோ 2.7 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புவிசார் மோதல்கள் ஏற்படும் போதெல்லாம் உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கம், வெள்ளியில் தான் பணத்தை போடுவார்கள். இதனால் தான் ஈரான் பதற்றம் தங்கம், வெள்ளி விலையை நிச்சயம் உயர்த்தும். எப்போது விலை உயரலாம் என காத்திருந்த தங்கத்திற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+