அமெரிக்காவின் தங்க இருப்புகளில் பெரும் பகுதியை கொண்டுள்ள Fort Knox-ன் பாதுகாப்பும், தங்க இருப்பும் குறித்து தற்போது அமெரிக்காவில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளது. எலான் மஸ்க் மற்றும் செனட்டர் ராண்ட் பால் போன்ற முக்கிய நபர்களும் இந்த விவகாரத்தில் இணைந்துள்ளதால் மிகப்பெரியதாக வெடிக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் காரணம் ஒரு எக்ஸ் பதிவு.
X சமூக ஊடக தளத்தில் Zerohedge என்ற பயனாளி செய்த பதிவில், எலான் மஸ்க் ஃபோர்ட் நாக்ஸை ஆய்வு செய்து, அமெரிக்க அரசாங்கம் அங்கு வைத்துள்ள 4,580 டன் தங்கம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். 1974 இல், அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் கடைசியாக தங்க இருப்புகளை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ தணிக்கை செய்தது என்றும் அதன் பின்பு எவ்விதமான ஆய்வுகளும், தணிக்கையும் நடக்கவில்லை என்றும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் எலான் மஸ்க்-ம் டேக் செய்யப்பட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், இவ்வளவு முக்கியமான சொத்தை வருடத்திற்கு ஒருமுறையேனும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படவில்லையா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த Zerohedge, அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ஃபோர்ட் நாக்ஸ் அமைந்துள்ள மாநிலமான கென்டக்கியின் செனட்டர் ராண்ட் பால் கூட இந்த டிவிட்டர் உரையாடலில் கலந்து கொண்டு, ஆய்வு ஏதும் செய்யப்படவில்லை, இப்போது ஆய்வு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
ஃபோர்ட் நாக்ஸில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு மிகப்பெரியது. தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் சுமார் 425 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இங்கு சேமிக்கப்பட்டு உள்ளது. லண்டனில் இருக்கும் பேங்க் ஆப் இங்கிலாந்து தங்க லாக்கருக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான தங்கம் இந்த இடத்தில் தான் உள்ளது.
அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ புத்தக மதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. பல வருடமாக ஃபோர்ட் நாக்ஸில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு அவுன்ஸ்-க்கு 42.22 டாலர் என்று கணக்கிடப்பட்டு வருகிறது, இதற்கு முக்கியமான காரணம் ஆய்வு செய்யப்படாதது தான். தங்கத்தின் இருப்பு அளவின் எடையும், மதிப்பையும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் காரணத்தால் இதன் உண்மையான மதிப்பு தெரியவில்லை.
1930 களின் நடுப்பகுதியில் கட்டப்பட்ட ஃபோர்ட் நாக்ஸ், அதன் அசைக்க முடியாத பாதுகாப்புக்கு பெயர் பெற்றது. தங்கம் தவிர, ஃபோர்ட் நாக்ஸ்-ல் பல நிறுவனங்கள், அமைப்புகளுக்கு சொந்தமான மதிப்புமிக்க பொருட்களையும் கொண்டுள்ளது.
தற்போது ஃபோர்ட் நாக்ஸில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் அளவு சுமார் 147.3 மில்லியன் அவுன்ஸ். 1941 ஆம் ஆண்டில் தான் ஃபோர்ட் நாக்ஸில் தங்க கையிருப்புகள் உச்சத்தை தொட்டது. அப்போது 649.6 மில்லியன் அவுன்ஸ் சேமிக்கப்பட்டு இருந்தன.
More From GoodReturns

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் IRAN..!! கூகுள், மைக்ரோசாப்ட், IBM-ஐ கட்டம் கட்டி அடிக்க முடிவு..!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications