அமெரிக்க அரசு ஷட்டவுன் அச்சம், உலக சந்தைகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஷட்டவுன் அச்சம் அமெரிக்க சந்தையை பாதிப்பது மட்டும் அல்லாமல் உலகளாவிய சந்தையையும் பாதித்துள்ளது தான் தற்போது முக்கிய பேசுபொருளாக உள்ளது. இதில் முதலும் முக்கியமாக தங்கம் விலை கடந்த 2 நாட்களாக தடாலடியாக உயர்ந்து இன்று 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை இந்தியாவில் 1,18,800 ரூபாயாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் நிதியாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிந்த நிலையில், புதிய நிதியாண்டுக்கான செலவின கொள்கை வெளியிட்ட நிலையில், இதில் அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த செலவின மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது.

இந்த செலவின மசோதா தான் அமெரிக்க அரசின் லைப்லைன், பாதுகாப்பு துறை முதல் துப்புறவு துறை வரை, அமைச்சர்கள் சம்பளம் முதல் அரசு அலுவலகத்தின் பியூன் சம்பளம் வரையில் இந்த மசோதா மூலம் தான் சம்பளம், முதலீட்டை பெறுகின்றனர். இந்க நிலையில் செலவின திட்டத்தில் இறுதி முடிவு எட்ட முடியாமல் தடுமாறுவதால், அமெரிக்க அரசு ஷட்டவுன் ஆக உள்ளது.
அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிலவு நிச்சயமின்மை, முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் தங்களுடைய பணத்தை திருப்புகின்றனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Mutual Fund முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? இதை பாருங்க
அமெரிக்க அரசு ஷட்டவுன் என்றால் என்ன?
அமெரிக்க அரசு இயங்குவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் செலவின திட்டங்களை (அப்ரோப்ரியேஷன் பில்கள்) நிறைவேற்ற வேண்டும். இந்த சரியான காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படாவிட்டால், பல அமைச்சகங்களும் சேவைகளையும், தங்களுடைய செயல்பாட்டையும் நிறுத்தும். இதுவே அரசு ஷட்டவுன் எனப்படுகிறது. இத்தகையை காலக்கட்டத்தில் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், ஊழியர்கள் சம்பளமின்றி பணியாற்ற வேண்டியிருக்கும். இதோடு அரசு திட்டங்கள், சேவைகள், மானியங்கள் நிறுத்தப்படும். இது அனைத்தும் முதலீட்டு சந்தைகள் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும்
தங்கம்- பாதுகாப்பு முதலீடு
அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகில் எந்தொரு நாடாக இருந்தாலும் அரசியல் நிச்சயமின்மை, பணவீக்கம் மற்றும் நிதி குழப்பங்களின் போது முதலீடுகள் பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கம் மீது திரும்பும். இந்த நிலையில் அமெரிக்கஅரசு ஷட்டவுன் என்றால் பல பில்லியன் டாலர்கள் ஒவ்வொரு நாளும் தங்கம் மீது திரும்பும். இதன் எதிரொலியாகவே தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் இந்த செலவின மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு
அமெரிக்காவின் இந்த ஷட்டவுன் அச்சம் அந்நாட்டின் வேலைவாய்ப்பு தரவு, புதிய வேலைகள் உருவாக்கம் மற்றும் வேலையின்மை விகிதத்தில் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். இதன் மூலம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்பார்ப்பை வலுப்படுத்துகிறது.
இந்த வட்டி குறைப்பும் மூலம் அரசு பத்திரங்கள் மற்றும் சேமிப்பு கணக்குகளின் மீதான முதலீட்டின் மீதான லாபத்தை குறைக்கின்றன. இதனால், இந்த முதலீடுகளும் தங்கம் மீது முதலீட்டாளர்கள் திருப்புவார்கள்.
பணவீக்கம் கவலைகள்
அமெரிக்க அரசு ஷட்டவுன் மற்றும் பொருளாதார பாதிப்பு ஆகியவை, பணவீக்க அச்சத்தை உயர்த்தியுள்ளது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பும் குறையும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தங்கம், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு ஆஸ்தியாக கருதப்படுவதால் இந்த வகையிலும் தங்கம் விலை உயர கூடும். இப்படி அமெரிக்க அரசின் ஷட்டவுன் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்திய சந்தை
அமெரிக்க அரசு ஷட்டவுன் இந்திய சந்தைகளையும் பாதிக்கும், ஏனெனில் உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நாடினால் வளரும் சந்தைகளில் முதலீடுகள் குறையும்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications