அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்திருக்கின்றன. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளே பற்றி எறிய தொடங்கி இருக்கிறது. இந்த போர் தங்கம், வெள்ளி விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையும் உயர வாய்ப்புள்ளது.
திங்கட்கிழமை உலக பங்கு சந்தைகளுக்கும், தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் போன்ற கமாடிட்டி சந்தைகளுக்கும் மிக மோசமான ஒரு நாளாக இருக்கப் போகிறது. ஒருபுறம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான வான்வெளி தாக்குதலை நடத்தி அந்நாட்டு தலைவரை கொன்று இருக்கின்றன. இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான் அடைந்து தகுந்த பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியதாக செய்தி வெளியான உடனேயே உலக சந்தையில் தங்கம் விலை உச்சமடைய தொடங்கியது. ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5278 டாலராகவும் வெள்ளியின் விலை 93 டாலராகவும் உயர்ந்தது. சென்னையிலோ பிப்ரவரி மாதம் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை நேற்று ஒரே நாளில் காலை மாலை என இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14, 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 650 ரூபாய் விலை உயர்ந்தது. ஒரு சவரன் என பார்க்கும்போது ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 5200 ரூபாய் உயர்ந்தது. அதாவது நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 1, 20,000 ரூபாயை கடந்து, 1,24,400 ரூபாய் என உச்சத்தை தொட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் தங்கம் விலையை உயர்த்தி அதிர்ச்சி தந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 15775 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1800 ரூபாய் உயர்வு கண்டு 1,26,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கம் தான் இப்படி என்றால் வெள்ளி விலையும் நேற்று ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 320 ரூபாயாக ஆனது ஒரு கிலோ 3.20 லட்சமாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் வெள்ளியின் விலை ஞாயிற்றுக்கிழமையான இன்றும் உயர்த்தப்பட்டு ஒரு கிராம் 325 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3.25 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் தலைவர் கொல்லப்பட்டது , அதனை தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பு ஆகியவை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை தக்க வைத்துள்ளன. எனவே ஞாயிற்றுக்கிழமை என்றும் கூட பார்க்காமல் நகை விற்பனை நிறுவனங்கள் தங்கம் , வெள்ளி விலையை உயர்த்தியுள்ளன. இன்றே இப்படி என்றால் நாளை கமாடிட்டி சந்தையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். நிச்சயமாக தங்கம், வெள்ளியின் விலை தாறுமாறாக உயரப் போவது உறுதி.

ஈரான் போர்பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு நாளும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு தொடரும். இந்த போர் பதற்றம் முடிவுக்கு வரும் வரை நிலைமை இப்படித்தான் இருக்கும் என்கின்றனர் முதலீட்டு துறை நிபுணர்கள். சில்லறை வணிகம் மட்டுமில்லாமல் சர்வதேச சந்தை, எம்சிஎக்ஸ் என அனைத்து இடங்களிலும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கம் மற்றும் வெள்ளியில் தங்களுடைய பணத்தை குவிக்க தொடங்குவார்கள். இதன் காரணமாக இந்த இரண்டின் விலையும் அதிகரிக்கும்.
இதற்கிடையே போர் பதற்றத்தினால் ஹார்முஸ் ஜலஸ் சந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு தேவையான 60% கச்சா எண்ணெய் இந்த வழியாக தான் வரவேண்டும் என்பதால் பெட்ரோல் , டீசல் விலை பெருமளவில் உயர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வருவது எப்போது? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

குவைத் மீது ஈரான் திடீர் தாக்குதல்.. இஸ்ரேல்-க்கு பதிலடி.. பற்றி எரியும் கச்சா எண்ணெய் ஆலை..!!

ஈரான் போரால் தலைதூக்கும் புது பிரச்சனை..!! இந்திய மக்களுக்கு அடுத்தடுத்த சிக்கல்..!!

புது வருடத்தில் ஈரானை திட்டமிட்டு தாக்கும் இஸ்ரேல்.. பெரும் சோகத்தில் ஈரான் மக்கள்..!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

கண்ணுக்கு தெரியாத ஆபத்து.. ஒரு 10 டாலருக்கு பின்னால் இப்படியொரு பிரச்சனை இருக்கா..?!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!



Click it and Unblock the Notifications