அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், 2025ஆம் ஆண்டுக்கான முக்கிய உலோகங்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. சீனா உடனான அரிய உலோக பிரச்சனைக்கு பின்பு அமெரிக்கா இத்துறையில் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையில் முதல் படி தான் இந்த லிஸ்ட்.
அமெரிக்கா அறிவித்துள்ள இந்த லிஸ்டில் 60 உலோகங்கள் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட உலோகத்தின் உற்பத்தி, தயாரிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் முயற்சியின் மூலம் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக களைய முடியும் என அமெரிக்கா நம்புகிறது.

டிரம்ப் அரசு 2017ல் முக்கிய உலோகத்தை அடையாளம் காணும் பணிகளை தொடங்கியது. இந்த பட்டியலில் இருக்கும் உலோக இருப்பை மேம்படுத்துவது மூலம் அமெரிக்க பொருளாதாரத்திற்கும், தேசிய பாதுகாப்பு நலனும் மேம்படும் என டிரம்ப அரசு நம்புகிறது. இதேபோல் 2025 லிஸ்ட்-ஐ பார்க்கும் போதும் வெளிநாடுகளை இனி உலோகத்திற்காக நம்பியிருக்க கூடாது என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக இருப்பதை காட்டுகிறது என அமெரிக்க உள்துறை செயலர் டக் பர்கம் தெரிவித்தார்.
புதிய உலோகங்கள் சேர்ப்பு
அமெரிக்க அரசு பல்வேறு கட்ட ஆலோசனை, ஆய்வுகளுக்கு பின்பு 2025 முக்கிய உலோக பட்டியலில் 10 உலோகங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. போரான், தாமிரம், ஈயம், உலோகவியல் நிலக்கரி, பாஸ்பேட், பொட்டாஷ், ரீனியம், சிலிகான், வெள்ளி, யுரேனியம் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது அனைவரின் கவனமும் வெள்ளி மீது தான் உள்ளது.

உலகளாவிய மாற்றம் - டார்கெட் சில்வர்
அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகளவில் பெரிய நாடுகள் வெள்ளி உலோகத்தில் கொள்கை அளவில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்து வருகிறது. முதலில் சீனா வெள்ளியின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதாக அந்நாட்டின் காமர்ஸ் அமைச்சகம் அக்டோபர் 30ஆம் தேதி அறிவித்தது.
இதன் பின்னர் அமெரிக்கா வெள்ளியை தனது முக்கிய உலோகமாக வகைப்படுத்தியது. இப்போது ஆஸ்திரேலியா 2024-2035 உத்தியில் ஐந்து முக்கிய உலோகங்களில் ஒன்றாக வெள்ளியை அறிவித்தது.
மூன்று பெரிய பொருளாதார நாடுகும் ஒரே சிக்னலை கொடுக்கிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?
காரணம்:
வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்களாக விற்பனை செய்யப்பட்ட காலம் மாறிய இன்றைய வர்த்தகம் மற்றும் பொருளாதார சந்தையில் வெள்ளி தொழில்துறை உலோகமாக மாறி தற்போது ஒரு தேசிய பாதுகாப்பு சொத்தாகவும், எனர்ஜி டிரான்ஸ்மிஷன் துறையின் அடித்தளமாக இருக்கிறகது. இதனாலேயே உலக நாடுகளின் அரசுகள் வெள்ளியை பாதுகாக்கத் தொடங்கியுள்ளன.
இதுக்குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.

அமெரிக்காவின் ஆட்டம் ஆரம்பம்
பொதுவாக அமெரிக்கா உலோகங்களை முக்கிய உலோகங்கள் பட்டியலில் சேர்க்கும் போது மக்கள் யாரும் கண்டுக்கொள்ளமாட்டார்கள். ஏற்கனவே 50 உலோகம் இப்பட்டியலில் இருக்கும் போது கூட 10 உலோகம் சேர்ந்தால் என்ன நடத்திவிடப்போகுது என்று தான் நினைப்பார்க்ள். ஆனால் இம்முறை ஆட்டம் வேறு.
வெள்ளி வெறும் உலோகம் அல்ல. அமெரிக்கா இப்பட்டியலில் லித்தியம் சேர்த்த போது ஈவி பேட்டரி-யின் முக்கிய பொருளாக மாறியது. காப்பர் சேர்த்த போது வயரிங் தேவை என்று புரிந்துக்கொள்ளப்பட்டது. ஆனால் வெள்ளியை சேர்க்க என்ன காரணம்..?
வெள்ளி ஏன் முக்கியம்?
வெள்ளி-யை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள் தான் உலகின் எனர்ஜி மற்றும் டெக்னாலஜி செயினை மொத்தமாக கட்டுப்படுத்துவார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. பொதுவாக ஒவ்வொரு முக்கிய உலோகங்களுக்கு மாற்று உலோகம் உள்ளது, ஆனால் வெள்ளிக்கு அப்படி இல்லை. இந்த பூமியில் மின்சாரம், வெப்பத்தை வெள்ளியை விட சிறப்பாக கடத்தும் உலோகம் வேறுஎதுவும் இல்லை. இதனால் இதை நவீன உலோகத்தின் இரத்த ஓட்டமாக வெள்ளி பார்க்கப்படுகிறது.
வெள்ளி உற்பத்தியில் இருக்கும் சிக்கல்
வெள்ளி உற்பத்தி என்பது நேரடியாக கனிமவளத்தில் இருந்து வருவது இல்லை, உலகளாவிய வெள்ளி விநியோகத்தில் சுமார் 70 சதவீதம் , ஜிங்க், தங்கம், காப்பர் கனிவளத்தை பிரித்து எடுக்கும் போது துணைப்பொருளாக கிடைக்கும் வெள்ளியை கொண்டு தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வெள்ளி விலை இரு மடங்கு உயர்த்தினாலும் உற்பத்தி அதிகரிப்பது சற்று கடினம்.
முக்கிய உலோகமான வெள்ளி
பெரும்பாலான உலோகங்கள் ஒரு துறைக்கு மட்டும் தொடர்புடையவையாக இருக்கும் ஆனால் வெள்ளி கதையே வேற ரகம். வெள்ளி எலக்ட்ரிக் வாகனங்கள், செமிகண்டக்டர் சிப்கள், காந்தங்கள், சோலார் மின்சாரம், செயற்கை நுண்ணறிவு சிப், பாதுகாப்பு துறை, மருத்துவ துறை, நீர் சுத்திகரிப்பு, மின்கட்டமைப்பு, ஸ்மார்ட்போன் என பல துறையில் வெள்ளி முக்கிய உலோகமாக உள்ளது. 21ஆம் நூற்றாண்டு பொருளாதாரத்தின் முக்கிய புள்ளியாக வெள்ளி மாறி வருகிறது.

அமெரிக்காவின் முடிவால் என்ன நடக்கும்?
அமெரிக்கா வெளிப்படையாக வெள்ளியை முக்கிய உலோகமான அறிவித்துள்ளது. இந்த ஒரு அறிவிப்பு வெள்ளி உற்பத்திக்கான கனிமவள சுரங்கத்திற்கும், வெள்ளியை கருவூலத்தில் சேமிக்க அமெரிக்க அரசு தனிப்பட்ட முறையில் நிதியை உருவாக்கும்.
அமெரிக்காவின் ECRA, IEEPA கீழ் அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதனால் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் வெள்ளி அளவு தொடர்ந்து குறையும்.
தங்கத்தை போல் வெள்ளியும் முக்கிய கையிருப்பாக மாற்ற அமெரிக்க கருவூல அமைச்சகம் கொள்கை வகுக்க துவங்கும். இதனால் வெள்ளி விலை தொடர்ந்து உயர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
வெள்ளியின் எதிர்காலம்
அமெரிக்கா வெள்ளியே முக்கிய உலோக பட்டியலில் சேர்த்தது வெறும் மாற்றம் அல்ல. பெரிய சிக்னல். இனி உலக நாடுகளின் அரசுகள் தங்கத்திற்கு இணையாக வெள்ளியை சேமிக்க துவங்கலாம்.
இதுநாள் வரையில் தங்கம் பணமாக இருந்தது, காப்பர் தொழில்துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் வெள்ளி இரண்டுமாக இருக்கப்போகிறது. இதனால் அடுத்த வெள்ளி விலை உயர்வு 2011 போல் இருக்காது, இதைவிட பெரியதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இக்கட்டான சூழ்நிலையில் வெள்ளி:
உலக நாடுகள் வெள்ளியை முக்கிய உலோகமாக அறிவித்திருக்கும் வேளையில், இதை அதிகளவில் சேர்க்க சில விஷயங்கள் நடக்க வேண்டும். ஒரு பக்கம் விலையை உயர்த்த வேண்டும் அப்போது தான் ரீடைல் முதலீட்டாளர்களை பயமுறுத்தி வெள்ளி-யில் முதலீடு செய்வதை தவிர்க்க செய்ய முடியும்.
மறுபக்கம் வெள்ளி அதிரடியாக உயர்ந்தால் டாலரின் பலவீனத்தை வெளிப்படுத்தும். இது முழு நாணய சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. விலை உயர்த்தினால் டாலருக்கு ஆபத்து. வெள்ளி சப்ளையை கட்டுப்படுத்தினால் விலை உயரும். இது எப்படியும் வெள்ளி விலை உயர்வுக்கு வழி வகுக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications