அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள Marathon Fusion என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், தங்கத்தை உருவாக்க புதிய முறையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, இந்நிறுவனம் நியூகிளியர் ஃபியூஷன் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்கத்தை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மாரத்தான் ஃப்யூஷன் என்ற நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அணுசேர்க்கை ரியாக்டரில் உருவாகும் நியூட்ரான் கதிர்வீச்சுகளை (neutron radiation) பயன்படுத்தி, மெர்க்யூரி (Mercury) எனப்படும் திரவ உலோகத்தை மாற்றி அதில் இருந்து தங்கம் உருவாக்கியுள்ளனர். முதலில், மெர்க்யூரி அணுக்களை மாறவைத்து, அதைப் மெர்க்யூரி-197ஆக மாற்றுகின்றனர். பின்னர், இது மிகவும் குறுகிய காலத்திலேயே இயற்கையான தங்கம்-197 (Gold-197) ஆக மாறுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு மெர்க்யூரியை (திரவ உலோகம்) தங்கமாக மாற்றலாம் என்பதற்காக ஆல்கிமி எனப்படும் பழைய அறிவியல் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவை வெறும் கற்பனையாகவே இருந்து விட்டன. இப்போது நவீன அணுசேர்க்கை தொழில்நுட்பம் அதே கனவைக் அறிவியல் அடிப்படையில் சாத்தியமாக்க முயற்சிக்கிறது. இதனால் எதிர்காலத்தில் முக்கியமான தொழில்துறை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
"மெர்க்யூரியை தங்கமாக மாற்றும் இந்த அணுசேர்க்கை அடிப்படையிலான மாற்ற செயல்முறை, அணுசேர்க்கை சக்தியை வெறும் மின்சார உற்பத்தி தொழில்நுட்பமாக மட்டுமின்றி, பலதரப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்துறை தளமாக மாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அணுசேர்க்கை சக்தி என்பது இப்போது வரை மின்சாரம் உற்பத்திக்கான தொழில்நுட்பமாகவே கருதப்பட்டது. ஆனால் இப்போது, அதன்மூலம் மெர்க்யூரியை தங்கமாக மாற்றவும் முடிகிறது என்பதால், இது ஒரு பன்முக தொழில்துறை தளமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் அதன் பொருளாதார (economic) மற்றும் சமூக மதிப்பு வலுப்பெறும்.
ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, ஒரு அணுசேர்க்கை சக்தி நிலையம், 1 கிகாவாட் (GW) வெப்ப சக்தி மூலம் ஒரு ஆண்டில் சுமார் 5,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாக இருக்கலாம். இந்த அளவிலான தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.4,500 கோடிக்கு மேல் இருக்கக் கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
மேலும், அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்ட தொழில்நுட்ப இடைவெளிகளை குறிவைத்து செயல்பட்டால், அணுசேர்க்கை சக்தியின் வர்த்தக பயன்பாட்டை வேகமாக கொண்டு வர முடியும். இவ்வாறு செயல்படுவதன் மூலம், உலோகத்தை தங்கமாக மாற்றும் கனவு செயற்கை வழிகளால் நிஜமாக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த அணுசேர்க்கை முறையில் உருவாகும் தங்கத்தில், சில நேரங்களில் கதிர்வீச்சு (radiation) இருக்கக்கூடும். அதனால், அந்த தங்கம் உடனடியாகப் பயன்பட முடியாது. இத்தகைய தங்கம் முழுமையாக பாதுகாப்பானதாக மாற, அதனை சுமார் 14 முதல் 18 ஆண்டுகள் வரை பாதுகாப்பு சூழலில் வைத்திருக்க வேண்டும்" என மாரத்தான் ஃப்யூஷனின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அடம் ரூட்கோஸ்கி தெரிவித்துள்ளார்.
மாரத்தான் ஃப்யூஷன் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து 6 மில்லன் அமெரிக்க டாலரும், அரசு பங்களிப்பாக 4 மில்லியன் அமெரிக்க டாலரும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications