தங்கம், வெள்ளி-க்கு வேட்டு.. அமெரிக்காவின் மாஸ்டர் பிளான்! இனி மொத்த பணமும் இங்க தான் குவியப்போகுது!

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் கெவின் வார்ஷ் ஜாக்சன் ஹோல் கூட்டத்தில் பேசிய பின்பு அமெரிக்க பத்திர முதலீட்டின் மீதான லாபமும், டாலர் மதிப்பும் அதிரடியாக உயர துவங்கியுள்ளது.

இதன் வாயிலாக இந்த வாரம் தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை, பிட்காயின் மற்றும் இதர முக்கிய சொத்துக்களின் மதிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதல் முறை நடப்பது அல்ல இதற்கு முன்பு ஜூன், ஜூலை மாதம் வெகின் வார்ஷ் பேசிய பின்பும் அமெரிக்க பத்திர முதலீட்டின் மீதான லாபம் அதிகரித்தது.

தங்கம், வெள்ளி-க்கு வேட்டு.. அமெரிக்காவின் மாஸ்டர் பிளான்! இனி மொத்த பணமும் இங்க தான் குவியப்போகுது!

கெவின் வார்ஷ் ஒருப்பக்கம் பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாகுவதில் தொய்வு போன்றவை பெரிய பாதிப்பாக பார்க்கப்படும் வேளையில் விரைவில் வட்டி விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதை உறுதி செய்தார்.

ஆனால் விஷயம் இதுவல்ல, அமெரிக்க மத்திய வங்கி தனது பத்திரத்தை டோக்கனாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், இதன் மூலம் பைபேக் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாகவும் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read

இதேபோல் அமெரிக்க அரசு சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் பத்திர முதலீட்டு சந்தையை தளர்த்தவும், சந்தை போக்கிற்கு அதிகமாக மாற்றவும் டோக்கனைசேஷன் முறையை கையில் எடுத்துள்ளது.

இதற்காக தான் அமெரிக்க அரசு சமீபத்தில் பத்திர சந்தை கொள்கை மற்றும் பெரடல் ரிசர்வ்-ன் கம்யூனிகேஷன் கொள்கைகளை திருத்தியும் உள்ளது. மேலும் அமெரிக்க அரசு பத்திர சந்தையை தளர்வாக்க முக்கிய காரணம் உலக நாடுகள் தான்.

கடந்த 1-2 வருடங்களாக உலக நாடுகள் அமெரிக்க அரசு கருவூல பத்திரத்தை விற்பனை செய்தும், தங்கத்திற்கு இணையாக பத்திரத்தை விற்று மாற்றுவதும் மூலம் தங்கத்தை சேகரிப்பதை அதிகரித்துள்ளது. இது தொடர்ந்தால் டாலர் மதிப்பும் சரி, பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபமும் சரிந்து அமெரிக்க பொருளாதாரத்திற்கும் அதன் ஆதிக்கத்திற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை தடுக்கவே டோக்கனைசேஷன் முறையில் கையில் எடுத்துள்ளது.

Recommended For You

பத்திரங்களை டோக்கனாக மாற்றும் போது எளிதாக சிறிய தொகைக்கு கூட வாங்கலாம், விற்கலாம். இதன் வாயிலாக உலகம் முழுவதில் இருந்து வர்த்தகம் செய்ய முடியும், அதேபோல் உலகம் முழுவதில் இருந்தும் முதலீட்டை பெற முடியும். உலகம் முழுவதில் இருந்தும் அமெரிக்க பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டால் டாலருக்கான டிமாண்ட் அதிகரித்து தொடர்ந்து டாலர் அதிக்கம் அதிகரிக்கும்.

இதேவேளையில் அமெரிக்க அரசு புதிதாக டாலரை அச்சிடவும் திட்டமிட்டு வருகிறது. இது அனைத்தும் உலக நாடுகளில் எடுக்கப்பட்டு உள்ள டாலருக்கு எதிரான நிலைப்பாடான dedollarisation முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+