சென்னை : வேகமாக இயங்கிக் கொண்டு இருக்கும் வாழ்க்கை முறையில் உணவு மக்கள் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. பசிக்காகச் சாப்பிடுவதைத் தாண்டி உணவை மக்கள் கொண்டாடும் விஷயமாகப் பார்த்து வருகின்றனர்.
மக்களுக்கு ஏற்றார் போல் ஒரு நகரத்தில் இந்தியாவின் அனைத்து பிரபலமான உணவுகள் கிடைப்பதைத் தாண்டி உலக நாடுகளின் உணவுகளும் இந்தியாவின் ஒவ்வொரு பெரு நகரங்களில் கிடைக்கத் துவங்கியுள்ளது.
இந்த நிலையில் உணவு எமோஷன் தொடர்புடையதைத் தாண்டி பெரும் வர்த்தகமாக மாறியுள்ளது, குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் புதிய உணவுகளுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும் காரணத்தால் உலகளவில் பிரபலமாக இருக்கும் முன்னணி பிராண்டுகள் அடுத்தடுத்து இந்தியாவுக்கு வர துவங்கியுள்ளது.
உணவு பிராண்டுகள்
ஏற்கனவே இந்தியாவில் பிரபலமான பல பிராண்டுகளான KFC, மெக்டொனால்டுஸ், டாமினோஸ், பர்கர் கிங், ஸ்டார்பக்ஸ், கோஸ்டா காஃபி போன்ற பல பிராண்டுகள் வந்துள்ள நிலையில், தற்போது உலக நாடுகளில் சில இடத்தில் மட்டுமே பிரபலமாகவும் அதே நேரம் தனக்கெனத் தனிப் பிராண்டு வேல்யூ கொண்ட பிராண்டுகள் வர துவங்கியுள்ளது.
Popeyes
இந்த வரிசையில் அமெரிக்காவில் பிரபலமான சிக்கன் பிராண்டான Popeyes இந்தியாவில் பெங்களூரை தொடர்ந்து வேறு எந்த நகரங்களுக்கும் செல்லாமல் சென்னைக்குத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து முதல் கடையைத் திறந்து அசத்தியுள்ளது.
அமெரிக்க ஃப்ரைடு சிக்கன்
இந்தியாவில் பல முன்னணி உணவு பிராண்டுகளைக் கொண்டு வந்த ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ் லிமிடெட், அமெரிக்கன் ஃப்ரைடு சிக்கன் பிராண்டான Popeyes சென்னையில் முதல் உணவகத்தைத் திறந்துள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
பெங்களூர்
Popeyes நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் ஐடி நகரமான பெங்களூரில் தனது முதல் உணவகத்தை 2022 ஜனவரி மாதம் திறந்ததைத் தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் பெங்களூர் நகரம் முழுவதும் 12 உணவகங்களை விரைவாக விரிவாக்கம் செய்தது.
மும்பை, டெல்லி
இதைத் தொடர்ந்து மும்பை, டெல்லி போன்ற நகரங்களைத் தேர்வு செய்யாமல் Popeyes நிறுவனம் சென்னையில், ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மாலில் வரும் ஜனவரி 20 முதல் தனது முதல் உணவகத்தில் வாடிக்கையாளர்களை வரவேற்க உள்ளது என்று ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ் லிமிடெட் மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Louisiana டேஸ்ட்
உலகெங்கிலும் உள்ள மக்கள் Popeyes இன் Louisiana பாணி Cajun சுவைகளை விரும்புகின்றனர். ஒரு நிறுவனமாக, நாங்கள் எங்கள் பிராண்டுகளின் சிறந்த சுவையைக் மக்களுக்கு அளிப்பதில் அதிகப்படியான கவனம் செலுத்துகிறோம்.
சமீர் கெதர்பால்
பெங்களூரை தொடர்ந்து சென்னைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தடுத்து நாட்டின் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளோம். மசாலா மற்றும் கஜூன் சுவையூட்டப்பட்ட ப்ரைடு சிக்கன் தான் எங்களின் முக்கிய உணவு, இது சென்னை மக்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறோம் என Popeyes நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சமீர் கெதர்பால் கூறினார்.
ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ்
இந்தியாவில் Popeyes-ஐ அறிமுகம் செய்துள்ள ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு Popeyes அனுபவத்தை நேரடியாக வழங்க நூற்றுக்கு நூறு சதவீத சொந்த எலக்ட்ரிக்-பைக்குகளைப் பயன்படுத்தி நேரடியாக டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications