அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் தனது அதிரடி நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக பரஸ்பர வரி விதிக்க போவதாக டிரம்ப் அறிவித்தது இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.டிரம்பின் வரி விதிப்பிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று இந்தியா தீவிரமாக யோசித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியும், அந்நாட்டின் இரண்டாவது பெண்மணியுமான உஷா வான்ஸூம் இந்த இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் இந்திய வருகை, அமெரிக்காவின் மிக முக்கியமான மூலோபாய கூட்டாளிகளில் ஒருவருடனான தொடர்ச்சியான ஈடுபாட்டை குறிக்கிறது. வான்ஸின் பயணத்திட்டங்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும், இந்த பயணம் இருநாடுகளுக்கு இடையே பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர விஷயங்களில் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஜேடி வான்ஸின் வருகை அதன் அரசியல் முக்கியத்துவத்திற்காக மட்டுமல்லாமல், அவரது மனைவி உஷா வான்ஸின் தனிப்பட்ட தொடர்பிற்காகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.
உஷா என்ற பெயரை கேட்ட உடனே அட நம்ம ஊரு பொண்ணு மாதிரி இருக்கே என்ற எண்ணம் ஏற்படும். அது சரிதான், அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். உஷா சிலுகுரி ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டவர். உஷாவின் தாத்தா சென்னையில் பணியாற்றியபோது, உஷாவின் அப்பா (கிரிஷ் சிலுகுரி) சென்னையில் பிறந்தவர். 1970களின் பிற்பகுதிகளில் உஷா சிலுகுரிவான்ஸின் பெற்றோர் கிரிஷ் சிலுகுரி மற்றும் லட்சுமி சிலுகுரி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கலிபேர்னியாவின் சான்டியாகோவில் குடியேறினர்.
பிறந்தது முதல் அங்கேயே வசித்து வரும் உஷா சிலுகுரி, அமெரிக்காவின் தேசிய சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஜேடி வான்ஸை உஷா முதன்முதலில் சட்டக் கல்லூரியில் ஒரு விவாத நிகழ்ச்சியின்போது சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. தற்போது உஷா-ஜேடி வான்ஸ் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். உஷா வான்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக முதல் முறையாக தனது மூதாதையர் நாட்டிற்கு வருகை தர உள்ளார்.
More From GoodReturns

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications