சேட்டன்கள் இடத்தை பிடிக்கும் உ.பி. மற்றும் பீகாரிகள்.. வளைநாடுகளில் பெரும் மாற்றம்..!!

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகள் அடங்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் பிராந்தியத்தில் இந்தியர்கள் அதிகளவில் வேலை பார்க்கின்றனர். இந்த நாடுகளில் தொழிலாளராக வேலை பார்க்கும் இந்தியர்களில் பெரும் பகுதியினர் சேட்டன்களாக (கேரளா) இருந்தனர். ஆனால் கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் கேரளத்தவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. அதேசமயம், உத்தர பிரதேசத்தினர் மற்றும் பீகாரிகள் அந்த நாடுகளுக்கு வேலைக்கு செல்வது அதிகரித்துள்ளது.

புளூ காலர் தொழிலாளர் வேலை வாய்ப்பு தளமான ஹன்டர் அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கேரளத்தவர்கள் எண்ணிக்கை 90 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இருப்பினும் அந்த நாடுகளில் சேட்டன்கள் விட்டு சென்ற இந்த வெற்றிடத்தை உ.பி. மற்றும் பீகாரிகள் நிரப்பியுள்ளனர். தற்போது வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் தொழிலாளர்களில் முதல் இரண்டு இடங்களில் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் உள்ளது.

சேட்டன்கள் இடத்தை பிடிக்கும் உ.பி. மற்றும் பீகாரிகள்.. வளைநாடுகளில் பெரும் மாற்றம்..!!

அரபு நாடுகளுக்கு தொழிலாளர்களை அதிகம் அனுப்பும் டாப் 5 மாநிலங்கள் பட்டியலில் உத்தர பிரதேசம்,பீகார், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை உள்ளன. இந்திய தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பணிபுரிய விருப்பமான இடங்களாக உள்ளன. 2023ம் ஆண்டில் முதல் 7 மாதங்களில் வளைகுடா நாடுகளுக்கு தொழிலாளர்கள் செல்வது 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் துபாய்க்கு இடம் பெயர்ந்த இந்தியர்களின் மக்கள்தொகை புள்ளிவிவரம், முதன்மையாக குவிந்துள்ள 20-40 வயது பிரிவு பணியாளர்களை வெளிப்படுத்துகிறது.

நீண்ட காலமாக ஆண் ஆதிக்கம் வெளிநாட்டு வேலைகளில் இருந்து வருகிறது. இருப்பினும், வளைகுடா நாடுகளில் குறிப்பாக விருந்தோம்பல் துறையில் இந்திய பெண் தொழிலாளர்கள் கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களில் குறைந்தபட்ச கல்வி முதல் தொழில் பயிற்சி வரை மற்றும் குறிப்பிட்ட வேலைகளுக்கான திறன்களையும் கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் கொண்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள் மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் அங்கு வேலைக்கு சென்றுள்ளனர்.

2024ல் துபாயில் கட்டுமானத் தொழிலாளர்கள், உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர்கள், விருந்தோம்பல் ஊழியர்கள் மற்றம் சுகாதார ஆதரவு பணியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் வேலைப் வாய்ப்புகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு வேலைவாய்ப்புகளுக்கு மத்தியில், தொழிலாளர்கள் நிதி மற்றும் ஒப்பந்த சிக்கல்கள் போன்ற சவால்களை அடிக்கடி சந்திக்கின்றனர். அதேசமயம், இந்தியா-ஐக்கிய அரப எமிரேட்ஸ் இடையிலான கூட்டு முயற்சிகள் நியாயமான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை உறுதி செய்ய விடாமுயற்சியுடன் தீர்வு அளிக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+