குடும்ப வர்த்தகத்தை ஏற்று நடத்தி வெற்றி பெற்ற பல பிரபலமான தொழிலதிபர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் உத்தர பிரதேசத்தின் பெரிய கோடீஸ்வரரும், ஆர்.எஸ்.பி.எல். குழுமத்தின் தலைவருமான முரளிதர் ஞானசந்தனி. இவரது சொத்து மதிப்பு ரூ.12,000 கோடி. இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 149வது இடத்தில் உள்ளார்.
2022ம் ஆண்டின் ஹூருன் பணக்காரர்கள் பட்டியலின்படி, உத்தர பிரதேசத்தில் முரளிதர் ஞானசந்தனியை விட பெரிய பணக்காரர்கள் யாரும் இல்லை. இந்த பட்டியலில் 3வது இடத்தில் அவரது தம்பி பிமல் குமார் ஞானசந்தனி உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.8,000 கோடி

உத்தர பிரதேசம் கான்பூரை சேர்ந்த சோப்பு தயாரிப்பாளர் தயாள்தாஸ் ஞானசந்தனியின் மகன்கள் முரளிதர் ஞானசந்தனி மற்றும் பிமல் குமார் ஞானசந்தனி. சகோதரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே வணிகத்தில் அப்பாவுக்கு உதவியாக இருந்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் சகோதரர்கள் இருவரும் வர்த்தகத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்து சென்றனர். 1988ல் ஸ்ரீ மகாதேயோ சோப் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கி காதி பிராண்டில் குறைந்த விலை வாஷிங் சோப் மற்றும் வாஷிங் பவுடர் தயாரித்து விற்பனை செய்தனர்.
அவர்கள் காதி பிராண்ட் அறிமுகம் செய்த காலகட்டத்தில், வாஷிங்பவுடர் சந்தையில் சர்ப் மற்றும் நிர்மா போன்ற பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் காதி பிராண்ட்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வட இந்தியாவில் காதி பிராண்ட் வாஷிங் பவுடர் மிகவும் பேமஸ். இதனையடுத்து அவர்கள் எஃப்.எம்.ஜி.சி. துறை மற்றும் பால் மற்றும் ஷூ தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களிலும் தடம் பதித்தனர்.
முரளிதர் ஞானசந்தனின் மகன்கள் மனோஜ் மற்றும் ராகுல் ஆகியோரும், பிமல் குமார் ஞானசந்தனின் மகன் ரோகித்தும் குடும்ப வர்த்தகத்தில் களம் இறங்கினர். 1995ல் லேயன் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கி ரெட் சீஃப் ஷூக்களை தயாரித்தனர்.
2005ல் 4 நான்கு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து நிறுவனத்தின் பெயரை ரோஹித் சர்பாக்டான்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஆர்.எஸ்.பி.எல்.) என பெயர் மாற்றினர். ஆர்.எஸ்.பி.எல். குழுமம் தங்கள் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. அவர்கள் தங்கள் பெற்றோர் பெயரில் கான்பூரில் ஒரு மருத்துவமனையையும் நடத்தி வருகிறார்கள் மற்றும் தொண்டு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications