இந்தியர்கள் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. வசதியான சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து அதை சாத்தியமாக்கி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பயண உள்கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது. புதிய விமான நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகள் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துகின்றன. இருப்பினும் ஒரே ஒரு மாநிலம் மட்டும் பயண உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்ட உள்ளது. அந்த மாநிலம் உத்தர பிரதேசம். விரைவில் நாட்டில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களை கொண்ட முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தர பிரதேசம் பெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
2012ம் ஆண்டு வரை உத்தர பிரதேசத்தில் லக்னோ (சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம்) மற்றும் வாரணாசி (லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம்) ஆகிய நகரங்களில் மட்டுமே சர்வதேச விமான நிலையங்கள் இருந்தன. அடுத்த ஆண்டுகளில் மாநிலத்தின் விமான போக்குவரத்து பரப்பு கணிசமாக மாறியது. 2021 அக்டோபர் 20ம் தேதியன்று குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புத்த சுற்றுலாவை முதன்மையான நோக்கமாக கொண்டு இந்த சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்டது. 2023ல் அயோத்தியில் உள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இப்பகுதியில் விமான இணைப்பை மேலும் மேம்படுத்தியது.

2024ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும். இந்த விமான நிலையம் 1,334 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அதன் முதல் கட்டடத்தில் ஆண்டுதோறும் 1.20 கோடி பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உத்தர பிரதேசத்தின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமாக மாறும். இந்த விரிவாக்கத்தின் மூலம் உத்தர பிரதேசம் இணையற்ற விமான இணைப்பை வழங்க உள்ளது. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு பயணத்தை எளிதாக்குகிறது.
டெல்லி-என்சிஆர் பிராந்தியத்தில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் (ஐஜிஐ) இரண்டாவது பெரிய விமான நிலையமாக நொய்டா சர்வதேச விமான நிலையம் செயல்படும். மேலும், இந்த விமான நிலையம் ஐஜிஐ விமான நிலையத்திலிருந்து சுமார் 72 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் புதிய விமான நிலையம், டெல்லி விமான நிலையத்தில் நெரிசலை கணிசமாக குறைக்கும். அதேசமயம் வளர்ந்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு தேவைகளை நொய்டா சர்வதேச விமான நிலையம் பூர்த்தி செய்யும்.
Story Written By: Subramaniam
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications