சென்னை: தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது . பண்டிகை காலத்தில் நமக்கு வரும் போனஸ் உள்ளிட்ட தொகைகளை தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நம் இந்திய குடும்பங்களில் இது போன்ற பண்டிகை காலங்களில் தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம்.
ஒரு வேளை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என விரும்பினால் அதற்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

டிஜிட்டல் கோல்ட்: தங்கத்தை டிஜிட்டல் முறையில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஆன்லைன் தளங்கள் மூலம் நீங்கள் எளிதாக டிஜிட்டல் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ள முடியும்.
பல்வேறு வங்கி வங்கிகள் கூட இப்படி டிஜிட்டல் கோல்டினை விற்பனை செய்கின்றன. எளிதாக செயலிகள் வாயிலாகவே யூனிட்களாக தங்கத்தை வாங்கலாம். நமக்கு தேவைப்படும் போது அன்றைய விலைக்கு தங்கத்தை விற்பனை செய்து பணமாக்கி கொள்ள முடியும். குறைந்த தொகையில் இருந்து முதலீடு செய்ய முடியும் என்பதால் இது அனைவரின் பட்ஜெட்டிற்கும் ஏற்றது.
தங்க நாணயங்கள்: தங்கத்தை நான் முதலீடாக தான் பார்க்கிறேன் என நினைப்பவர்கள் தங்க நகைகளுக்கு மாற்றாக நாணயங்களை வாங்கி கொள்ளலாம். இவ்வாறு தங்க நாணயமாக வாங்கும் போது செய்கூலி சேதாரம் மிச்சமாகும். உங்களுக்கு தேவைப்படும் போது நாணயங்களை வழங்கி நகையாக மாற்றி கொள்ளலாம். விற்பனை செய்து பணமாகவும் மாற்றலாம்.
நகைக்கடைகள், வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் சில ஈ காமர்ஸ் தளங்கள் கூட தங்க நாணயங்களை விற்பனை செய்து வருகின்றன. இவை அனைத்தும் பிஐஎஸ் விதிமுறைகளின் படி ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நாணயங்களாக இருக்கிறதா என்பதை ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டு வாங்குவது நல்லது.
கோல்டு ஈடிஎஃப்: தங்கம் என்பதை நான் முதலீடாகவே பார்க்கிறேன் என கூறுபவர்கள் கோல்டு ஈடிஎஃப்களை வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஈடிஎஃப் என்பது ஓபன் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகும்.
அதாவது நம்மை போன்ற முதலீட்டாளர்கள் இந்த கோல்ட் ஈடிஎஃப்களில் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனங்கள் நம்மிடம் இருந்து முதலீட்டைப் பெற்று தங்கத்தில் முதலீடு செய்வார்கள். பல்வேறு பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனங்கள் வழியாக நாம் எளிதாக ஈடிஎஃப்களை வாங்கலாம். ஒரு நிறுவனத்தின் பங்குகள் எப்படி வர்த்தகமாகிறதோ அதேபோல ஈடிஎஃப்களும் வர்த்தகமாகும். எனவே நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கோல்டு ஈடிஎஃப்களை வாங்கலாம் மற்றும் விற்பனை செய்யலாம்.
தங்க பத்திரங்கள்: அரசு சார்பாக வெளியிடப்படும் தங்க பத்திர திட்டங்களில் நாம் எளிதாக முதலீடு செய்யலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வாயிலாக தங்கப் பத்திரங்களை வாங்கலாம். கிராம்கள் கணக்கில் தங்க பத்திரங்களில் முதலீடு செய்து ஆண்டுதோறும் முதலீட்டு தொகைக்கு வட்டி கிடைக்கும். 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டது. ஆனால் நடப்பாண்டில் அரசு இதுவரை தங்க பத்திர வெளியீடு குறித்து அறிவிக்கவில்லை.
Written by: Devika
More From GoodReturns

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய தங்க சந்தையில் தள்ளுபடி – சீனாவில் பிரீமியம் விலை? ஏன்?

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தங்கம், வெள்ளி.. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலின் எதிரொலி..!!

ஈரான் போர்: ஞாயிற்றுக்கிழமையிலும் உயர்த்தப்பட்ட தங்கம் விலை!! இனி தங்கம் விலையை கையில பிடிக்க முடியாது!!

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?



Click it and Unblock the Notifications