இந்தியாவில் உணவு பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சாமானிய மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது முழுமையாக தெரியாத நிலையில், இந்திய மக்கள் சாப்பிடும் சராசரி உணவுகள் அடிப்படையாக கொண்டு ஒரு மீல்ஸ் அல்லது ஒரு தாலி விலையை அளவுகோள் ஆக கொண்டு கணக்கிடப்பட்டு உள்ளது.
மீல்ஸ்/தாலி என்ற உடன் ஆந்திரா மீல்ஸ் போன்ற ஆடம்பர உணவுகள் என நினைக்க வேண்டாம், ஒரு நாளுக்கு ஒரு வேளைக்கு சாமானிய மக்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அடிப்படை உணவு அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், காய்கறி, எரிவாயு ஆகியவற்றை வைத்து ஒரு தாலி அல்லது ஒரு மீல்ஸ் விலை கணக்கிடப்படுகிறது.

இப்படி ஜூலை மாதத்தில், CRISIL அமைப்பு உணவுத் தட்டு விலை ஆய்வின்படி, வீட்டில் தயாரிக்கப்பட்ட சைவத் தாலியின் சராசரி விலை சுமார் 33.7 ரூபாயாகவும், அசைவத் தாலியின் விலை சுமார் 66.8 ரூபாயாகவும் இருந்தது.
ஜூலை மாத தரவுகளை ஜூன் மாத தரவுகள் உடன் ஒப்பிடும் போது வெஜ் தாலி விலை 34 சதவீதமும், அசைவ தாலி உணவின் விலை 13 சதவீதமும் அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வுக்கு அடிப்படையான காரணம் தக்காளி, அரிசி விலையில் பதிவான குறிப்பிடத்தக்க அளவிலான உயர்வு தான். தக்காளி விலை உயர்வை மட்டுமே பேசி வந்ததில் பிற காய்கறிகளின் விலை உயர்வை கவனிக்கவில்லை.
ஆகஸ்ட் 7 அன்று வெளியிடப்பட்ட CRISIL இன் மாதாந்திர உணவு விலை மதிப்பீட்டின் அடிப்படையில், இந்தியாவில் அடிப்படை சைவ தாலியின் விலை ஜூன் முதல் ஜூலை வரை கணிசமாக 34% உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்கள், நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
ஜூன் மாதத்தில் கிலோவுக்கு ரூ.33 ஆக இருந்த தக்காளியின் விலை, ஜூலை மாதத்தில் கிலோ ரூ.110 ஆக உயர்ந்து, ஒரே மாதத்தில் 233% உயர்ந்துள்ளது. கூடுதலாக, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் ஜூன் முதல் ஜூலை வரை முறையே 16% மற்றும் 9% மிதமான உயர்வை பதிவு செய்துள்ளன.
மறுமுனையில் அசைவ தாலியின் விலை குறைவான உயர்வை மட்டுமே சந்தித்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் ப்ராயிலர் விலை 3- 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, சமையல் எண்ணெய் விலை 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதனால் மாதாந்திர அடிப்படையில் அசைவ தாலியின் விலை கணிசமாகவே உயர்ந்துள்ளது.
காய்கறி, அரசி விலை மட்டும் அல்லாமல் ஜூலை மாதம் மிளகாய் விலை 69 சதவீதமும், சிரகம் 16 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதோடு பிற மசாலா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications