எங்கு திருப்பினாலும் மக்கள் வருமானத்தை ஈட்டும் வழிகளை தேடி வரும் வேளையில், இந்த தவிப்பை பலர் தவறாக பயன்படுத்தி பெரும் மோசடி செய்து வருகின்றனர். பணம் இல்லாதவர்களிடம் வேலை வாங்கித்தருவதாக மோசடி, பணம் இருப்பவர்களிடம் ஷாப்பிங் பெயரில் மோசடி செய்வது தற்போது அதிகரித்துள்ளது.
27 வயதான காய்கறி கடை வியாபாரி ஒருவர், பலநூறு பேரிடம் போலியாக வேலை வாங்கி திருவதாகவும், அதை வீட்டில் இருந்தே செய்ய முடியும் என்று ஆசை காட்டி சுமார் 21 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் அவர் தப்பியோடுவதற்கு முன்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ரிஷப் சர்மா என்ற 27 வயதான காய்கறி கடை வியாபாரி, 10 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட 37 மோசடி வழக்குகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளார், இவரின் பெயர் தற்போது 855 வழக்குகளில் தொடர்புடையதாக உள்ளது.
சமீபத்தில் ரிஷப் சர்மா டெஹ்ராடூன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 20 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் அக்டோபர் 28 அன்று உத்தரகாண்ட் காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.
ரிஷப் சர்மா சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபரிதாபாத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்கும் பணியை செய்து வந்தார். மற்ற தொழிலதிபர்களைப் போலவே, தொற்றுநோய் காலதத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இதில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் அவருக்கு உருவான நிலையில் தனது குடும்ப செலவுகளை சமாளிக்க வீட்டில் இருந்து பணியாற்றும் பல வேலைவாய்ப்புகளில் சேர்ந்தார்.
இதன் பின்னர் ஒரு நாள் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டிருந்த தனது பழைய நண்பரை ரிஷப் சர்மா சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின்பு ரிஷப் சர்மா மோசடி பணிகளை செய்யத் தொடங்கி வெறும் ஆறு மாதங்களில் 21 கோடி ரூபாயை ஈர்த்துள்ளார் என உத்தரகாண்ட் மூத்த காவல்துறை அதிகாரி அங்குஷ் மிஸ்ரா கூறினார்.
ரிஷப் சர்மா முதலில் "Marriot Bonvoy" marriotwork.com என்ற போலி இணையதளத்தை உருவாக்கினார். இது பிரபல ஹோட்டல் நிறுவனத்தின் அசல் வலைத்தளமான marriot.com போலவே இருந்தது. இந்த நிலையில் "Marriot Bonvoy" ஹோட்டல் குழுமத்திற்கு இணையத்தில் ரிவ்யூவ் எழுதுவதற்கு பகுதி நேர வேலை பற்றி விளம்பரம் செய்யப்பட்டது.
இணையதளம், விளம்பரம் எல்லாம் சிறப்பாக இருந்த நிலையில் ஒரு தொழிலதிபர் ஆகஸ்ட் 4 அன்று, வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பைப் பற்றிய வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பப்பட்டது. அங்கிருந்து அது வேலைவாய்ப்பு, முதலீடு, MLM, கிரிப்டோ என பல பரிமானங்களில் நெட்வொர்க் வளர்ந்து 21 கோடி ரூபாய் மோசடி செய்யும் அளவுக்கு பூதாகரமாக மாறியது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications